2021 ஏப்ரல் 20, செவ்வாய்க்கிழமை

நாட்டை காட்டிக்கொடுப்பவள் என விமர்சிக்கப்பட்டாலும் அஞ்சமாட்டேன்: ஹிருணிகா பிரேமச்சந்திர

Super User   / 2011 நவம்பர் 20 , பி.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தனது தந்தை பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் கொலைக்கு சர்வதேச ரீதியாக நியாயம் தேட முற்படும்போது இலங்கையில் தான் துரோகி, நாட்டைக் காட்டிக்கொடுப்பவள் என விமர்சிக்கப்பட்டாலும் அச்சமடையப்போவதில்லை என பாரத லக்ஷ்மனின் மகள் ஹிருணிகா பிரேமச்சந்திர பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

'என்னை துரோகி எனக் கூறக்கூடியவர்களைவிட நான் நாட்டை நேசிக்கிறேன். இந்நிலையில் நான் துரோகி என முத்திரைக் குத்தப்படுவதற்கு அஞ்சவில்லை' என இலங்கைக்கு வெளியே குறிப்பிடப்படாத இடமொன்றிலிருந்து ஹிருணிகா பிரேமச்சந்திர பிபிசி சிங்கள சேவையான சந்தேசயவுக்கு தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் ஆலோசகரான பாரத லக்ஷ்மனின் கொலை விடயத்தில் நீதியை நிலைநாட்ட இலங்கை தவறினால், தான் சர்வதேச ரீதியாக நியாயம் தேடுவதைத் தவிர வேறு வழி இல்லை என ஹிருணிகா கூறியுள்ளார்.

'இலங்கையில் சட்டம் ஒழுங்கு இல்லாவிட்டால் எமக்கு வேறு வழி என்ன?' என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

பாரத லக்ஷ்மன் கொல்லப்பட்ட முல்லேரியா சம்பவத்தில் காயமடைந்த நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவை கைது செய்யுமாறு கொழும்பு நீதிமன்றமொன்று அண்மையில் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.

இத்தீர்ப்பு நீதித்துறை மீதான நம்பிக்கையை மீண்டும் ஏற்படுத்தியிருப்பதாக கூறிய ஹிருணிகா, இக்கொலை விசாரணை பலவீனமடைய இடமளிக்க வேண்டும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கோருவதாக தெரிவித்துள்ளார்.

' இது அச்சுறுத்தல் அல்ல, ஜனாதிபதியிடம் விடுக்கும் கோரிக்கை.  இவ்விசாரணை பலவீமடைந்தால்  சட்டம் ஒழுங்கு இல்லாத நாடு என இலங்கை  சர்வதேச ரீதியாக அறியப்படும்' என ஹிருணிகா கூறினார்.

இத்தீர்ப்பு நீதித்துறை மீதான நம்பிக்கையை மீண்டும் ஏற்படுத்தியிருப்பதாக கூறிய ஹிருணிகா, இக்கொலை விசாரணை பலவீனமடைய இடமளிக்க வேண்டும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கோருவதாக தெரிவித்துள்ளார்.

' இது அச்சுறுத்தல் அல்ல, ஜனாதிபதியிடம் விடுக்கும் கோரிக்கை.  இவ்விசாரணை பலவீமடைந்தால்  சட்டம் ஒழுங்கு இல்லாத நாடு என இலங்கை  சர்வதேச ரீதியாக அறியப்படும்' என ஹிருணிகா கூறினார்.

இதேவேளை,  துமிந்த சில்வா, பாதாள உலகை சேர்ந்தவரோ போதைப்பொருள் கடத்துபவரோ அல்ல, அவர் ஒரு தெரிவுசெய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷ கூறியுள்ளார்.

துமிந்த சில்வாவுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றிலிருந்த சிறார் வல்லுறவு வழக்கொன்றை  இலங்கையின் சட்டமா அதிபர் முன்னர் வாபஸ் பெற்றார். ஆனால் இவ்வழக்கை சட்டமா அதிபர் வாபஸ் பெற்றமை தவறானது என அப்போதைய பிரதம  நீதியரசர் அசோக டி சில்வா பிபிசி சந்தேசயவிடம் தெரிவித்தார்.

பாரத லக்ஷ்மன் பபிரேமச்சந்திர குடும்பத்திற்கு நியாயம் கிடைத்தால் அது லசந்த விக்கிரமதுங்க போன்ற ஏனைய குடும்பங்களுக்கும் உதவும் என பாரத லக்ஷ்மனின் மகள் ஹிருணிகா பிரேமச்சந்திர பிபிசி சிங்கள சேவையான சந்தேசயவிடம் தெரிவித்துள்ளார்.

அநீதி நிலவும் ஆசிய நாடுகளில் இலங்கை ஏற்கெனவே  முன்னிலையில் உள்ளதாக ஹிருணிகா கூறியுள்ளார்.

' இலங்கையின் மனித உரிமை நிலைவரம் குறித்து உலகத் தலைவர்கள் கரிசனைகளை எழுப்புவதற்கு இது காரணமாக இருக்கலாம்.

தவறுகள் இடம்பெறுவதற்காக சர்வதேச சமூகம் காத்திருக்கிறது. எனவே ஜனாதிபதிக்கு எனது செய்தி என்னவென்றால், தயவு செய்து இதற்கு இடமளிக்க வேண்டாம். இலங்கைக்கு மீது விரல் நீட்டுவதற்கு சர்வதேச சமூகம் விரல் நீட்டினால் அது உங்கள் நடவடிக்கைகள் காரணமாக இடம்பெறும்' எனவும் ஹிருணிகா தெரிவித்துள்ளார்.

பேஸ்புக் பிரசாரம்

அதேவேளை, பேஸ்புக் மூலம் நியாயம் தேடும் பிரசாரத்தை மேற்கொள்ளும் இலங்கையின் இளம் சமூகத்தினருக்கு தான் தலைவணங்குவதாக என இளம் சட்டத்துறை மாணவியான ஹிருணிகா கூறியுள்ளார்.

"இந்நாட்டை முன்னேற்றுவதற்கு இளையோரின் சக்தி இலங்கைக்கு தேவைப்படுகிறது. எனவே அநீதிக்கு எதிராக போராடவும் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும் கல்வி கற்ற இளம் தலைமுறையினர் தலைமை தாங்குவதற்காக தருணம் இது" என அவர் தெரிவித்துள்ளார்.

-பிபிசி - (தமிழில்: தமிழ் மிரர்)


  Comments - 0

 • PUTTALAM MANITHAN Wednesday, 23 November 2011 12:24 AM

  சக்கீனா இமயமலையையும் சிறு உளி கொண்டு தகர்க்கலாம் என்று நிங்கள் அறியவில்லையா?

  Reply : 0       0

  meenavan Monday, 21 November 2011 05:16 AM

  இளம் கன்று பயம் அறியாதுதானே? ஹிருணிகா துணிச்சலை பாராட்டுகிறோம்.ஆனால் உங்கள் வேண்டுகோள் வெற்றி அளிக்குமா? காலம் பதில் சொல்லும்.

  Reply : 0       0

  thivaan Monday, 21 November 2011 06:58 AM

  பூ ஒன்று புயலானது ,

  Reply : 0       0

  sakeena Monday, 21 November 2011 07:33 AM

  நீங்கள் மோத நினைப்பது இமய மலையுடன்....

  Reply : 0       0

  naleem Monday, 21 November 2011 07:35 AM

  welcome

  Reply : 0       0

  fath Monday, 21 November 2011 12:19 PM

  இவ்வாறுதான் சில புரட்சி மாற்றங்களின் ஆரம்பங்கள் இருந்திருக்கின்றன . பார்ப்போம்.

  Reply : 0       0

  harini Monday, 21 November 2011 04:13 PM

  well done hirunika

  Reply : 0       0

  marani Monday, 21 November 2011 05:54 PM

  இந்தத் துனிச்சல் நிலைக்குமா?

  Reply : 0       0

  alga Monday, 21 November 2011 06:13 PM

  Harunikka you are our next chandrikka!!!
  Cheers!!!

  Reply : 0       0

  சிறாஜ் Monday, 21 November 2011 09:05 PM

  துணிச்சலை பாராட்டுகிறேன் தங்கையே.....

  Reply : 0       0

  Pottuvilan Monday, 21 November 2011 09:07 PM

  நாங்கள் எல்லோரும் உங்களுடைய கருத்துடன் ஒத்து போகிறோம், தொடர்க உங்கள் பணி.

  Reply : 0       0

  ashar Tuesday, 22 November 2011 01:26 AM

  உங்கள் துணிச்சல் எதுவரைக்கும் பார்போம்.

  Reply : 0       0

  amhar Tuesday, 22 November 2011 03:17 AM

  துணிச்சலான பெண்மணி ஹிருணிக்கா.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .