Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
Suganthini Ratnam / 2011 நவம்பர் 22 , மு.ப. 07:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாடாளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற வரவு, செலவுத்திட்ட உரையின்போது குழப்பம் விளைவித்தமை தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கவுள்ளதாக சபாநாயகர் சமல் ராஜபக்ஷ இன்று தெரிவித்துள்ளார்.
தனது கட்சி உறுப்பினர்களுக்கு தற்போதைய சூழ்நிலையில் நாடாளுமன்றத்தில் பாதுகாப்பானதொரு நிலைமை இல்லையென எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தமைக்கு பதிலளிக்கும் விதமாகவே சபாநாயகர் இவ்வாறு கூறியுள்ளார். நாடாளுமன்ற விதிமுறைகளின்படி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமென ரணில் விக்கிரமசிங்க கூறினார்.
'நாடாளுமன்றத்தினுள் எங்களது பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லையென்றால் நாம் என்ன செய்வது' எனவும் ரணில் விக்கிரமசிங்க கேள்வியெழுப்பினார்.
நாடாளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை முன்வைக்கப்பட்ட வரவு, செலவுத்திட்டத்திற்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் பதாகைகளைத் தாங்கியவாறு ஆர்ப்பாட்டம் செய்திருந்தனர். (KelumBandara and YohanPerera)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago