Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2011 நவம்பர் 23 , மு.ப. 07:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
மன்னார் கடலில் இரண்டு இடங்களில் இயற்கைவாயு கண்டுபிடிக்கப்பட்டதாக அரசாங்கம் கூறியபோதும் அங்கு இயற்கைவாயு போதியளவில் இல்லையெனவும் இதனால் பொருளாதார ரீதியில் நன்மையளிக்க போவதில்லையெனவும் தமிழ்மிரரின் சகோதர மொழியான ஆங்கில இதழான டெய்லிமிரருக்கு கிடைத்த செய்திகள் தெரிவிக்கின்றன
இந்த விடயத்தில் எண்ணெய் ஆய்வில் ஈடுபட்ட கெய்ன் இன்டர்நெஷனல் நிறுவனம் இலங்கைக்கு அறிவித்துள்ளதென அறியப்படுகிறது.
இரண்டாவது கிணற்றில் 4000 மீற்றர் ஆழத்தில் ஹைதரோகாபன் படிவுகள் காணப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அவற்றில் 15 சதவீதமானவையே அகழ்வாராய்ச்சியை தொடர்ந்து பயன்படுத்தக்கூடியதெனவும் பொருளாதார ரீதியில் சாதகமற்றதெனவும் தரவுகள் வெளிபடுத்துகின்றன.
முதலாவது கிணற்றில் இதையும்விட குறைந்தளவிலேயே காணப்பட்டது. இனி தனக்கு வழங்கப்பட்ட மூன்றாவது கடல் பகுதியில் ஆய்வை மேற்கொள்வது மட்டும் தான் இந்த ஆய்வு நிறுவனத்துக்கு எஞ்சியுள்ள பொறுப்பாகும்.
ஒக்டோபர் 8இல் நடந்த உள்ளூராட்சிமன்றத் தேர்தல்களுக்கு முன்னர் மன்னார் கடலில் எரிவாயு கண்பிடிக்கப்பட்டதாக அரசாங்கம் அறிவித்திருந்தது.
மன்னாரில் எரிவாயு கண்பிடிக்கப்பட்டது உண்மையானால் அரசாங்கம் பெற்றோலிய கைத்தொழில் அபிவிருத்தி பற்றி ஏன் வரவு, செலவுத்திட்டத்தில் குறிப்பிடவில்லையென ஐ.தே.கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க நேற்று வினவினார்.(Kelum Bandara)
meenavan Wednesday, 23 November 2011 07:15 PM
உள்ளுராச்சி தேர்தலின் காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட எரிவாயு, பட்ஜெட் வாசிப்புடன் தீர்ந்து விட்டது. எஞ்சுவது பொது மகன் வாழ்க்கை செலவு அதிகரிப்பு. மக்களை ஏமாற்றும் சித்து விளையாட்டு.
Reply : 0 0
THALA Wednesday, 23 November 2011 07:46 PM
வரும் ஆனா அடுத்த ஜனாதிபதி தேர்தல் முடியும் வரைக்கும் வராது. ஆனா அது வரைக்கும் வரும் ஆனா வராது.
Reply : 0 0
faroos Thursday, 24 November 2011 01:50 AM
உள்ளுராச்சி தேர்தலின்போது கண்டுபிடிக்கப்பட்ட எரிவாயு எரிந்துவிட்டது பட்ஜெட் காலத்திற்குள் என்ன செய்யலாம். நம் வாழ்க்கையில் பிறர் வாழ்வு இருப்பதால் விட்டுக்கொடுப்போம் வழிக்கு வரும்வரை இது எதுவரைக்கும்?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 Jul 2025
14 Jul 2025
14 Jul 2025