Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2011 நவம்பர் 24 , மு.ப. 08:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
மதுபான பழக்கத்திற்கு எதிரான 'மத்தட்ட தித்த' என்ற கொள்கையை அரசாங்கம் முன்வைத்தபோதிலும், உள்நாட்டில் தயாரிக்கப்படும் செறிவான மதுபானங்கள், பியர் ஆகியவற்றின் உற்பத்திகள் கடந்த வருடத்தில் அதிகரித்துள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
கடந்த வருடத்தில் 49 மில்லியன் லீற்றர் செறிவான மதுபானம் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ளது. முன்னைய வருடத்தைவிட அதிகமாக 41.1 மில்லியன் லீற்றர்; செறிவான மதுபானம் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதேவேளை 2009ஆம் ஆண்டு 55.5 மில்லியன் லீற்றர் பியர் உற்பத்தி இடம்பெற்றது. கடந்த வருடம் 71.3 மில்லியன் லீற்றர் பியர் தயாரிக்கப்பட்டுள்ளதாக கலால் திணைக்கள அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
கடந்த 2009ஆம் ஆண்டில் 384 ரூபாவை மதுபான விற்பனை உத்தரவுப்பத்திரம் மூலம் பெற்றுக்கொண்ட கலால் திணைக்களம், கடந்த வருடம் இந்த வகையில் 407 மில்லியன் ரூபாவை பெற்றுக்கொண்டது. அத்துடன், நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட அபராதத்திற்கமைய 234 மில்லியன் ரூபா கலால்த் திணைக்களத்திற்கு கிடைத்தது.
யுத்தத்திற்கு பின்னரான காலப்பகுதியில் வடக்கு, கிழக்கில் அதிகரித்த மதுபாவனையும் சுற்றுலாப்பயணிகளின் அதிகரிப்பும் இலங்கையில் மதுபான விற்பனை அதிகரித்தமைக்கு காரணங்களாக அமைகின்றனவென கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது. சட்டத்திற்கு புறம்பான மதுபான உற்பத்திகள் மீது கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டமையும் சட்டரீதியான மதுபான விற்பனை அதிகரிக்கக் காரணமென கலால் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. ( Kelum Bandara and Yohan Perera)
15 minute ago
23 minute ago
27 minute ago
ullooran Thursday, 24 November 2011 07:58 PM
எமது நாட்டில் லஞ்சம், ஊழல் போன்றன அதிகரிக்கும்போது என்ன சட்டம் கொண்டுவந்தாலும் மது மற்றும் போதைவஸ்து பாவனை அதிகரித்துக்கொண்டே இருக்கும். முதலில் லஞ்ச ஊழலை ஒழித்தால் இதன் பாவனையை கட்டுப்படுத்த முடியுமே.........!.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
23 minute ago
27 minute ago