2021 ஏப்ரல் 11, ஞாயிற்றுக்கிழமை

தபால் திணைக்களத்தில் பெரும் முத்திரை தட்டுப்பாடு

Super User   / 2011 நவம்பர் 25 , மு.ப. 01:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(ஒலிந்தி ஜயசூரிய)

இலங்கை தபால் திணைக்களம் கடுமையான முத்திரைத் தட்டுப்பாட்டை எதிர்கொள்வதாகவும் இத்தட்டுப்பாட்டினால் திணைக்களத்துக்கு பல மில்லியன் ரூபா இழப்பு ஏற்படுவதாகவும் கூட்டிணைந்த தபால்  ஊழியர்களின் சங்கம் நேற்று தெரிவித்தது.

50 சதம், 1 ரூபா, 2 ரூபா, 3 ரூபா, 12 ரூபா, 50 ரூபா, 100 ரூபா பெறுமதியான முத்திரைகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதாக சங்கத்தின் ஏற்பாட்டாளர் சிந்தக பண்டார கூறினார். தபால் முத்திரைகளை அச்சிடுவதிலுள்ள முட்டுக்கட்டைகளே இதற்கு காரணம்  என  தபால் சேகரிப்பாளர்கள் சமூக பணியக வட்டாரங்கள் தெரிவித்தன.

தபால் திணைக்களத்துக்கு அதிக வருமானத்தை மூலமாக முத்திரைகள் உள்ளன. இந்நிலையில் முத்திரை தட்டுப்பாட்டினால் மில்லியன் கணக்கான ரூபா வருமான இழப்பு ஏற்படுகிறது என அவர் கூறினார்.

'இப்பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால் நாம் மேலும் பிரச்சினைகளை எதிர்நோக்க நேரிடும்' எனவும் அவர் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .