Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை
Super User / 2011 நவம்பர் 28 , மு.ப. 11:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கெலும் பண்டார, யொஹான் பெரேரா)
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தின்போது நாடாளுமன்றத்திற்கு பொருத்தமற்ற வார்த்தைப் பிரயோகங்கள் மேற்கொள்ளப்பட்டன.
ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோவின் தந்தை மற்றும் பரம்பரையினர் தொடர்பாக உற்பத்தி ஊக்குவிப்பு அமைச்சர் லக்ஷ்மன் செனவிரட்ன நாடாளுமன்றத்திற்குப் பொருத்தமற்ற வார்த்தைகளை பிரயோகித்தார்.
2012 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட விவாதத்தின்போது இவ்வார்த்தைப் பிரயோகங்கள் இடம்பெற்றன. அப்போது ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பிய ஐ.தே.க. எம்.பி. ஹார்ஷா டி சில்வா, நாடாளுமன்றத்திற்கு பொருத்தமற்ற வார்த்தைப் பிரயோகங்களை ஹன்சார்ட்டிலிருந்து நீக்குமாறு குழுக்களின் பிரதித் தலைவர் முருகேசு சந்திரகுமாரிடம் கோரினார்.
கையொன்று அகற்றப்பட்ட நிலையிலுள்ள, ஹரின் பெர்னாண்டோ எம்.பியின் தந்தையின் உடற்குறைபாடு குறித்தும் அமைச்சர் செனவிரட்ன கேலியாக பேசினார்.
இதையடுத்து இருவருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றது. பின்னர் சபைக்கு வெளியே இருவருக்கும் இடையில் மோதல் ஏற்படும் நிலை தோன்றியது. எனினும் இரு தரப்பையும் சேர்ந்த சக எம்.பிகள் தலையிட்டு அம்மோதலை தடுத்தனர்.
meenavan Monday, 28 November 2011 10:58 PM
நாட்டு மக்களின் நன்மை கருதி நாம் தெரிவு செய்த பிரதிநிதிகளின் செயற்பாட்டின் நிலையை என்னவென்று கூறுவது?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
9 hours ago
17 Apr 2021