2021 ஏப்ரல் 14, புதன்கிழமை

ராஜீவ் கொலைக் குற்றவாளிகளின் மரண தண்டனை ரத்து செய்யப்படுவதை எதிர்க்கவில்லை:தமிழக அரசு

Menaka Mookandi   / 2011 நவம்பர் 29 , மு.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கின் குற்றவாளிகளான பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்வதற்கு தாம் ஒருபோதும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று தமிழக அரசு இன்று அறிவித்துள்ளது.

தங்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும், தங்களை விடுவிக்க வேண்டும் என்று மேற்படி மூவரும் கோரிக்கை விடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது தமிழக அரசு சார்பில் நீதிமன்றத்தில் மேற்படி தகவல் வழங்கப்பட்டது.  

ஏற்கனவே இந்த மனு கடந்த ஆகஸ்ட் மாதம் 30ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையிலேயே மேற்படி மூவரையும் தூக்கிலிடுவதற்கு சென்னை உயர்நீதிமன்றத்தினால் 8 வார கால இடைக்காலத் தடை உத்தரவு விடுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கை விசாரிக்கக் கூடாது என்றும் மேல்நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்று கோரியும் வெங்கட் என்பவர் சார்பில் மேல்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதை விசாரித்த மேல்நீதிமன்றம், மத்திய அரசு, மாநில அரசு உள்ளிட்டோருக்கு அழைப்பாணை விடுக்க உத்தரவிட்டுள்ளது. இருப்பினும் சென்னையில் நடைபெறும் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X