2021 ஏப்ரல் 20, செவ்வாய்க்கிழமை

மருந்துப்பொருட்கள் மீது விலைக் கட்டுப்பாடு மேற்கொள்ள நடவடிக்கை

Suganthini Ratnam   / 2011 நவம்பர் 30 , மு.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதல் சுகாதார அமைச்சு மருந்துப்பொருட்கள் மீது   விலைக்கட்டுப்பாட்டை மேற்கொள்ளவுள்ள நிலையில், பன்னாட்டு மருந்துக் கம்பனிகள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.

விலைக்கட்டுப்பாட்டு நடவடிக்கை அவசியமற்றதெனவும் இது தரமான மருத்துவ சேவைக்கு தடையாக அமையக்கூடியதெனவும் பன்னாட்டு மருந்துக் கம்பனிகள் குறிப்பிட்டுள்ளன.

'தெற்காசியாவிலுள்ள ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் மருந்துப்பொருட்களின் விலை மிகக் குறைவானது. இந்த விலைக்கட்டுப்பாடு காரணமாக மருந்துப்பொருள் உற்பத்தியில் ஈடுபடுவோர்கள் முதலீடு செய்வதற்கு தயக்கம் காட்டுவார்கள்' என மருந்துப்பொருள் உற்பத்தி கைத்தொழில் கூட்டமைப்பின் தலைவர் விஷ் கோவிந்தசாமி கூறினார்.

சந்தை நிலைமை பாதகமாக அமையும்போது பிரபல மருந்துப்பொருள் விநியோகிஸ்தர்கள் இலங்கைக்கு மருந்துப்பொருட்களை அனுப்பிவைக்கமாட்டார்கள். இதனால் அத்தியாவசிய மருந்துப்பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு விலை அதிகரிப்புக்கு வழிவகுக்குமெனவும் அவர் கூறினார்.

அரசாங்கம் நல்லதொரு மருந்துப்பொருள் விலைக்கட்டுப்பாட்டு முறையை கொண்டுவருவதில் தீவிரமாகவுள்ளது. நோயாளிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதும் பங்குதாரர்கள் எவருக்கும் நியாயம் கிடைக்கச் செய்வதும் இதன் நோக்கமாகுமென சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். (Sandun A. Jayasekera)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .