2021 ஜனவரி 16, சனிக்கிழமை

ஊடக செயலர் பிணையில் விடுவிப்பு

Menaka Mookandi   / 2012 நவம்பர் 08 , பி.ப. 06:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

(லக்மால் சூரியகொட)

சிரேஷ்ட அமைச்சர் அதாவுட செனவிரத்னவின் ஊடக செயலாளர், கொழும்பு, கோட்டை நீதவானினால் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அரசாங்க மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களைப் பெற்றுத்தருவதாகக் கூறி ஏழு பேரிடமிருந்து பணத்தை மோசடி செய்ததாக குற்றஞ்சாட்டி கொள்ளுப்பிட்டி பொலிஸார் இவரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர்.

இவருக்கு எதிரான வழக்கு நீதவான் கனிஷ்க விஜேரத்ன முன்னிலையில் விசாரணைக்கு நேற்று எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன் போது அவரது சார்பில் ஆஜரான வழக்குரைஞர் சந்தேகநபர் பலரின் பணத்தை திருப்பிக் கொடுத்து சமரசம் செய்துள்ளார் என நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்வந்தார்.

இதைத்தொடர்ந்து சந்தேக நபரை 50 ஆயிரம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க நீதவான் உத்தரவிட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .