2021 ஜனவரி 21, வியாழக்கிழமை

சிறுவர் பூங்காவை விற்பனை செய்ததாக கோட்டை மேயருக்கு எதிராக வழக்கு

Menaka Mookandi   / 2012 நவம்பர் 09 , பி.ப. 07:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

(பாரூக் தாஜுதீன்)

கோட்டை மாநகரசபைக்கு உட்பட்ட நாவல, கொஸ்வத்தை பகுதியில் அமைந்துள்ள சிறுவர் பூங்கா ஒன்றை தனியார் ஒருவருக்கு விற்பனை செய்தார் என்று கோட்டை மேயர் ஜனக ரணவக்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, கொழும்பு, கோட்டை நீதவான் சந்துன் வித்தான முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

ஜீ.எச்.ஜொகின் என்பவருக்கு கோட்டை மேயர், குறித்த பூங்காவை 4 கோடி ரூபாவுக்கு விற்பனை செய்தார் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கோட்டை மாநகர அமைச்சர் பிரசன்ன ரவிந்திரலாலினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

38.5 பேர்சஸ் பரப்பளவு கொண்ட மேற்படி சிறுவர் பூங்கா மற்றும் சுமார் 6 கோடி ரூபா பெறுமதியான விளையாட்டு உபகரணங்கள் கடந்த 2011.10.01 - 2012.9.30ஆம் காலப்பகுதியில் விற்பனை செய்யப்பட்டதாக மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.

அரச சொத்துக்களை உடைமையாக்கல் மற்றும் பாவனைக்குட்படுத்தலுக்கு எதிராக சட்டத்தின் கீழ் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த விடயங்களைக் கருத்திற்கொண்ட நீதவான், எதிர்வரும் ஜனவரி 8ஆம் திகதி, கோட்டை மேயர் ஜனக ரணவக்க மற்றும் காணியை கொள்வனவு செய்ததாகக் கூறப்படும் ஜீ.எச்.ஜொகின் ஆகியோரை நீதிமன்றில் சமூகமளிக்குமாறு அழைப்பாணை விடுக்க உத்தரவிட்டார்.

  Comments - 0

  • ariffchandrasri Saturday, 10 November 2012 10:41 AM

    இது என்ன பெரிய விடயம். சிறிலங்காவையே ஒரு குரூப் கூறு போட்டு விற்றுக் கொண்டிருக்கின்றது தெரியாதா ?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .