2021 ஜனவரி 22, வெள்ளிக்கிழமை

இளம் தம்பதியினர் மீது தாக்குதல்

Kanagaraj   / 2012 நவம்பர் 11 , மு.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சுபுன் டயஸ்)

இரத்தினபுரி,கஹவத்த பிரதேசத்தில் இளம் தம்பதியினர் மீது இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்ட தாக்குதலில் அவ்விருவரும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கஹவத்த திம்புல்கல்வல பிரதேசத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அப்பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் நுழைந்த இனந்தெரியாத நபர் ஒருவரே அவ்விருவரையும் கூரிய ஆயுதத்தினால் தாக்கி விட்டு தப்பிச் சென்றுள்ளார்.

இத்தாக்குதல் சம்பவம் நேற்று சனிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவித்த பொலிஸார் சம்பவத்தில் படுகாயமடைந்த இருவரும்; இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்தில்  27 வயதிற்கும் 28 வயதிற்கும் இடைப்பட்ட தம்பதியினரே காயமடைந்துள்ளதாக தெரிவித்த பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .