2021 ஜனவரி 27, புதன்கிழமை

இந்தியா ஏன் மௌனம் காக்கிறது: கூட்டமைப்பு

Kanagaraj   / 2012 நவம்பர் 13 , மு.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

13 ஆவது திருத்தம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்குள் கருத்துவேறுபாடுகள் எழுந்துள்ளன இவ்வாறான நிலையில்,

இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் ஏற்படுத்தப்பட்ட 13 ஆவது திருத்தம் தொடர்பில் இந்தியா மௌனம் காப்பது ஏன் என்று தமிழ் தேசியக்கூட்டமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.

நாடளுமன்றத்தில் வரவு-செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் நேற்று கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே கூட்டமைப்பின் எம்.பியான ஈ.சரவணபவன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

இந்த தேசிய விவகாரத்திற்கு தீர்வு காண்பதற்கு இந்தியா தீவிரமாக தலையிட வேண்டும். இந்த விவகாரத்தை இந்தியா கையாளுகின்ற விதமானது எமது கட்சிக்கு சந்தேகமளிக்கிறது. 13 ஆவது திருத்தம் இந்தியாவின் குழந்தை ஆதலால் அதனை நீக்க வேண்டாம் என இலங்கையை இந்திய அறிவுறுத்த வேண்டும்.


  Comments - 0

  • Sumathy m Wednesday, 14 November 2012 12:34 AM

    இரட்டை வேடம் போடுகிறவர்கள் யார்? இந்தியாவா? தமிழ் தேசிய கூட்டமைப்பா? 13வது திருத்த சட்டத்தை ஏற்க மறுத்தவர்கள், 13வது திருத்த சட்டம் நீக்கப்படப்போகிறதென்றவுடன் முதலைக் கண்ணீர் வடிப்பது இரட்டை வேடம். தமிழ் மக்களுக்கு பிரச்சினை.. பிரச்சினை.. என்று ஒப்பாரி வைப்பவர்கள்.. தீர்வு கைகூடி வந்தவேளை குழப்பியடித்தது இரட்டைவேடம். எமது மக்களை கொல்லக்கொடுத்தவர்கள்... மக்கள் கொல்லப்பட்டபின் ஒப்பாரி வைப்பது இரட்டை வேடம். உண்மையில் இரட்டை வேடம் போடுகிறவர்கள் கூட்டமைப்பினர் தான். இந்தியாவல்ல. இனிவருங் காலத்திலாவது மக்களுக்கு உருப்படியாக ஏதாவது செய்யட்டும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .