2021 ஜனவரி 23, சனிக்கிழமை

அழுங்கு செதில்களுடன் இந்தியர் கைது

Kanagaraj   / 2012 நவம்பர் 13 , மு.ப. 07:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

அழிவின் விளிம்பிலுள்ள அரிய வகையான அழுங்கு செதில்களை கடத்துவதற்கு முயன்ற இந்திய பிரஜை ஒருவரை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் சுங்க பிரிவினர் கைது செய்துள்ளனர்.

இவரிடமிருந்து இரண்டு கிலோகிராம் அழுங்கு செதில்கள் கைப்பற்றப்பட்டன. பயணப்பொதியில் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைத்து கடத்துவதற்கு முயற்சித்த வேளையிலேயே இவiர் நேற்றிரவு கைது செய்துள்ளதாக  சுங்க பிரிவினர் அறிவித்துள்ளனர்.

இவரிடம் மேற்கொண்ட விசாரணைகளில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் கடந்த இரண்டு வருடங்களில் 100 தடவைகள் அவர் பயணித்ததாக தெரிவிக்கப்படுகின்றது. சர்வதேச வர்த்தக உடன்படிக்கையின் பிரகாரம் அருகிவரும் உயிரினங்கள் மற்றும் ஆபத்தான விலங்குகள் வர்த்தகம் செய்வதற்கு தடைச்செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்;.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .