2021 ஜனவரி 22, வெள்ளிக்கிழமை

கள்ளத்தொடர்பு குற்றச்சாட்டு; குவைட்டில் இலங்கைப் பெண் - இந்திய சாரதி கைது

Menaka Mookandi   / 2012 நவம்பர் 13 , மு.ப. 10:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

குவைட் நாட்டில் பணிப்பெண்ணாக வேலை பார்க்கும் இலங்கைப் பெண்ணொருவர், இந்திய சாரதியொருவருடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் அந்நாட்டு பொலிஸாரால் அவ்விருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த பெண் வேலை பார்க்கும் வீட்டுக்கு அயல் வீட்டில் சாரதியாக வேலைபார்க்கும் இந்தியர் ஒருவருடனேயே இவர் தொடர்பு வைத்திருந்தார் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பில் குவைட் பொலிஸில் செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்தே அவர்களிருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடம் பொலிஸார் விசாரணை நடத்தியபோது, தங்களுக்குள் இரகசிய உறவொன்று இருப்பதை அவர்கள் ஒத்துக்கொண்டுள்ளனர் என்று அரூம் ரைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், அவர்களிருவருக்கும் எதிராக வழக்கு தொடர குவைட் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர் என்று அச்செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .