2021 ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை

இலங்கையில் ஐ.நா.வின் நடவடிக்கை தொடர்பான அறிக்கை இவ்வாரம் சமர்ப்பிப்பு

A.P.Mathan   / 2012 நவம்பர் 14 , மு.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

இறுதி யுத்த காலகட்டத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்ட நிபுணர்குழுவின் அறிக்கை இவ்வாரம் கிடைக்கப்பெறும் என ஐநா செயலாளர் நாயகத்தின் பேச்சாளர் அறிவித்துள்ளார்.

நியூயோர்க்கில் நடைபெற்ற வாராந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்ட ஐநா செயலாளர் நாயகம் பான்கி மூனின் பேச்சாளர் மார்டின் நெசிர்கி தொடர்ந்து கூறுகையில்…

குறித்த அறிக்கை செயலாளர் நாயகத்திடம் கிடைக்கப் பெற்றதும் அதனை முழுமையாக வாசித்து பொதுமைப்படுத்த நடவடிக்கை எடுப்போம் என்றார்.

இலங்கையில் பிரச்சினை உள்ள காலத்தில் ஐநாவின் சொந்த நடவடிக்கைகளை ஆய்வு செய்ய ஐ.நா. செயலாளரின் பரிந்துரையின் பேரில் ஓர் உள்ளக ஆய்வு குழு நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .