2021 ஜனவரி 21, வியாழக்கிழமை

விசாரணையில் அரசியல் அழுத்தம் இல்லை: பொலிஸ்

Menaka Mookandi   / 2012 நவம்பர் 14 , மு.ப. 11:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

கஹவத்தை படுகொலை விசாரணையில் எவ்வித அரசியல் அழுத்தமும் பிரயோகிக்கப்படவில்லை என்று தெரிவித்த பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருமான பிரசாந்த ஜயக்கொடி, கஹவத்தையில் 13 கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய அனைத்து சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டுள்ளனர் என்றும் கூறினார்.

மேற்படி கொலைச் சம்பவங்கள் தொடர்பான அனைத்து ஆதாரங்களும் தற்போது திரட்டப்பட்டுள்ளன. அத்துடன், படுகொலைச் சம்பவங்கள் இடம்பெற்ற பகுதியிலும் அதனை அண்மித்த பிரதேசங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த பாதுகாப்பு கடமைக்காக 37 பொலிஸ் உத்தியோகஸ்தர்களும் 70 பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் நியமிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், ஒரு பொலிஸ் முகாமும் அதிரடிப்படை முகாமொன்றும் நிறுவப்பட்டுள்ளது. இதன்மூலம் குறித்த கிராமங்களுக்கு 24 மணிநேர பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

கஹவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நிரஞ்ஜன் அபேவர்தன இடமாற்றம் செய்யப்பட்டமைக்கு பாரிய எதிர்ப்பு கிளம்பியது. இவர் இப்பொலிஸ் நிலையத்தை பொறுப்பேற்றதன் பின்னரும் இரண்டு கொலைச் சம்பவங்கள் இடம்பெற்றுவிட்டன.

அதனால், இந்த பிரச்சினைக்கு தீர்வு காணக்கூடிய அதிகாரியொருவர் தேவைப்பட்டார். அந்த தேவையின் நிமித்தமே நிரஞ்சன் அபேவர்தனவை இடமாற்றம் செய்ய தீர்மானிக்கப்பட்டது. இருப்பினும் அத்தீர்மானம் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது' என்று பொலிஸ் பேச்சாளர் மேலும் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .