2021 ஜனவரி 27, புதன்கிழமை

டிரானின் கின்னஸ் சாதனைக்கு பரிசளிப்பேன்: ரணில்

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 15 , மு.ப. 09:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

(யொஹான் பெரேரா)

ஜனநாயகத் தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸ் கின்னஸ் சாதனை படைத்துள்ளதாகவும் இந்த சாதனைக்காக அவருக்கு பரிசு ஒன்றை வழங்கவுள்ளதாகவும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை விசேட கூற்றை விடுத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

நாடாளுமன்றத்தில் இரண்டு வருடங்களுக்கு பேசுவதை தவிர்த்துவருவதன் மூலம் ஜனநாயகத் தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸ்  உலக சாதனை படைத்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸ் 2010ஆம் ஆண்டிலிருந்து நாடாளுமன்றத்தில் பேசுவதில்லை

'இவரின் இந்த சாதனைக்காக பரிசு ஒன்றை வழங்கவுள்ளேன்' எனவும் அவர் தெரிவித்தார். இதனால் அவையில் சிரிப்பொலி எழுந்தது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .