2021 ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை

பொன்சேகாவை கைவிடமாட்டேன்: கெட்டகொட

Menaka Mookandi   / 2012 நவம்பர் 16 , மு.ப. 06:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனநாயக கட்சியிலிருந்த விஷக் கிருமிகள் அகன்றதன் பின்னர் கட்சியினால் சரியானதொரு பாதையில் பயணிக்க முடிகிறது என்று அக்கட்சியின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜயந்த கெட்டகொட தெரிவித்துள்ளார்.

கட்சியின் தலைவர் சரத் பொன்சேகாவை ஒருபோதும் கைவிடப்போவதில்லை என்றும் அவருடன் இணைந்து சிறைவாசம் அனுபவிக்கவும் தான் தயாராக உள்ளதாகவும் கெட்டகொட எம்.பி குறிப்பிட்டுள்ளார்.
 
ஜனநாயக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான டிரான் அலஸ் மற்றும் அர்ஜுன ரணதுங்க ஆகியோர் அண்மையில் அக்கட்சியிலிருந்து விலகியதுடன் அவ்விருவரும் பொன்சேகாவுக்கு தனித்தனியாக கடிதங்களையு அனுப்பி வைத்துள்ளனர்.

அக்கடிதங்களில், அவரது விடுதலைக்காக தாம் இருவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டமை குறித்தும் தெளிவுபடுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .