2021 ஜனவரி 16, சனிக்கிழமை

விடுதலை நிபந்தனைகள் நிறைவேறவில்லை: பொன்சேகா

Menaka Mookandi   / 2012 நவம்பர் 16 , பி.ப. 09:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா, தன்னை சிறையிலிருந்து விடுவிப்பதற்கு தான் டிரான் அலஸிற்கு முன்வைத்த நிபந்தனைகள் நிறைவேற்றப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

'எனது விடுதலை பற்றி பேசுவதற்கான சில வழிகள் தெரிவதாகவும் தான் பேச்சுவார்த்தையை தொடங்கலாமா என டிரான் அலஸ் என்னிடம் கேட்டார். அப்போது நான் சில நிபந்தனைகளை விதித்தேன்' என்றார்.

தனது சிவில் உரிமைகள், தான் பெற்ற இராணுவ கௌரவங்கள் என்பன மீளளிக்கப்பட வேண்டுமென்பது தனது நிபந்தனைகளில் அடங்கியிருந்தது என பொன்சேகா கூறினார்.

பின்வரும் நிபந்தனைகள் ஏற்கப்பட்டால் அவரை பேசும்படி கூறினேன். நான் விடுவிக்கப்பட்டால் எனக்கு பூரண அரசியல் சுதந்திரம் இருக்க வேண்டும்.
மஹிந்த ராஜபக்ஷ என்னிடமிருந்து பறித்த எனது பதவிநிலை, எனது பதக்கங்கள், ஓய்வூதியம், எனது குடும்பத்திடதிருந்து பறித்த ஏனைய விடயங்களை ராஜபக்ஷ எனக்கு விதிக்கப்பட்ட தண்டனைகளையும் மீளப் பெற வேண்டும்.

எனக்கு ராஜபக்ஷவுக்கு எதிராக அரசியலில் ஈடுபட முழு சுதந்திரம் வழங்கப்பட வேண்டும். நான் ஒருபோதும் அரசாங்கத்துடன் சேர மாட்டேன். இவையே எனது நிபந்தனைகளாக இருந்தன' என்று அவர் கூறினார்.

தனது நிபந்தனைகளின் அடிப்படையில் டிரான் அலஸ் பேசுவதற்கு ஒப்புக்கொண்டாரென பொன்சேகா கூறினார். இந்த நிபந்தனைகளின் கீழ் பேசுவதாக டிரான் அலஸ் கூறினார்.

அவர் எட்டு மாதங்களாக என்ன பேசினார் என்பது எனக்கு தெரியவில்லை. இந்த நிபந்தனைகள் நிறைவேற்றப்படாமல் நான் சிறையிலிருந்து வெளியே அனுப்பப்பட்டேன்.

அவரது பேச்சுவார்த்தை வெற்றிகரமானது என நான் நினைக்கவில்லை. நான் சிறையிலிருந்து வெளித்தள்ளப்பட்டமையால் எனக்கு நீதி கிடைத்தது என ஆகாது.

இதன் மூலம் அவருக்கு துரோகம் இழைக்கப்பட்டது என அவர் நினைக்கின்றாரா? என பொன்சேகாவிடம் கேட்டபோது, அவர் இல்லை என கூறினார்.

'நான் அப்படிச் சொல்ல மாட்டேன். டிரான் அலஸ், தன்னால் இயன்ற முழுவதையும் செய்திருக்கலாம். அவருக்கு அநீதியிழைக்க மாட்டேன். ஆனால், நான் எதிர்ப்பார்த்ததை அவர் செய்யவில்லை.'

தற்போது அவரது அரசியல் இயக்கத்தில் ஏற்பட்டுள்ள பிரிவினை பற்றி கருத்து கூறிய பொன்சேகா, தான் சளிக்கமாட்டேன் எனவும் மக்களுக்கான தொடர்ந்து பாடுபடுவேன் எனவும் முழு அரசியல் கலாசாரத்தையும் மாற்றிவிடும் ஓர் அரசியல் இயக்கத்தை தன்னால் தோற்றுவிக்க முடியும் என நம்பிக்கை இருப்பதாகவும் கூறினார்.

தற்போதைய ஆட்சியை அண்மைக் காலத்தில் கவிழ்க்கக்கூடிய ஒரு பொது எதிரணியை உருவாக்கும் தனது முயற்சிகள் வெற்றிபெரும் என தனக்கு நம்பிக்கை இருப்பதாக சரத் பொன்சேகா மேலும் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .