2021 ஜனவரி 27, புதன்கிழமை

தீர்வையற்ற வாகனங்களுக்கான நிபந்தனையில் தளர்வு

Menaka Mookandi   / 2012 நவம்பர் 16 , பி.ப. 01:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசாங்க ஊழியர்கள் பெற்றுக்கொண்ட தீர்வையற்ற வாகனங்களுக்கான உத்தரவுப் பத்திரத்தை கைமாற்ற முடியாத வகையில் விதிக்கப்பட்டிருந்த நிபந்தனை தளர்த்தப்பட்டுள்ளது.

இந்த நிபந்தனை இன்று முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் தளர்த்தப்படுவதாக சுங்க திணைக்களப் பணிப்பாளர் நெவில் குணவர்தன தெரிவித்தார்.

இது தொடர்பிலான அறிவுறுத்தல் நிதி அமைச்சிடமிருந்து கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் கூறினார்.

அரச ஊழியர்கள் தீர்வையின்றி கொள்வனவு செய்கின்ற புதிய மற்றும் பழைய  வாகனங்களுக்கான உத்தரவுப் பத்திரத்தை மூன்று வருடங்களுக்கு கைமாற்ற முடியாத வகையில் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .