2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

ராஜீவை சந்திக்க கிட்டு ஏற்பாடு செய்தார்: கே.பி

Menaka Mookandi   / 2012 நவம்பர் 17 , மு.ப. 10:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியுடனும் இந்தியாவுடனும் நல்ல உறவுகளை பேணுமாறு விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், அவ்வியக்கத்தின் முக்கியஸ்தரான கிட்டுவிடம் தெரிவித்திருந்தார்.

அதன் பிரகாரம் காசி ஆனந்தன், பொருளாதார வல்லுநர் அர்ஜூன சிற்றம்பலம் ஆகியோரின் மூலமாக இந்தியாவுக்கு சென்று ராஜீவ் காந்தியை சந்திப்பதற்கான ஏற்பாடுகளை கிட்டு மேற்கொண்டிருந்தார் என தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் (கே.பி) தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை சம்பவத்துடன் எனக்கு எந்த தொடர்பும் இல்லை. தமிழீழ விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரை பல்வேறு பிரிவுகள் இருந்தன.அடுத்த பிரிவில் வேறு எவரும் தலையிட முடியாது. தமிழகத்தில் இருந்து செயற்பட்டவர்கள் வேறு ஒருவரது தலைமையின் கீழ் செயல்பட்டனர்.

ராஜீவ் கொலை பற்றி எனக்கு மட்டுமல்ல கிட்டுவுக்கும் கூட எதுவுமே தெரிந்திருக்கவில்லை. ராஜீவ் காந்தியுடனும் இந்தியாவுடனும் நல்ல உறவை மேம்படுத்துமாறு கிட்டுவிடம் பிரபாகரன் கூறியிருந்தார்.

அதன் பிரகாரம் காசி ஆனந்தன், பொருளாதார வல்லுநர் அர்ஜூன சிற்றம்பலம் ஆகியோர் மூலமாக இந்தியாவுக்கு சென்று ராஜீவ் காந்தியை சந்திப்பதற்கான ஏற்பாடுகளை கிட்டு மேற்கொண்டிருந்தார்' என்றார்.

  Comments - 0

  • Sumathy m Saturday, 17 November 2012 05:06 PM

    அப்படியானால் ராஜீவ் கொலை தொடர்பாக காசியானந்தன் சிற்றம்பலம் ஆகியோரும் மீண்டும் விசாரிக்கப்பட வேண்டும்

    Reply : 0       0

    Mohan Sunday, 18 November 2012 03:17 AM

    கூட்டு சதியில் அந்த நேரத்தில் ஒன்றாக இருந்து செய்து விட்டு இப்ப இப்படி எல்லாம் சொல்லுங்க. ஐயா சாமி வேண்டாம் ஐயா உங்க சகவாசம் ஜனங்களுக்கு!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X