2021 ஜனவரி 24, ஞாயிற்றுக்கிழமை

சிவப்பு மழைக்கு ட்ரெஷலோமொனஸ்ஸே காரணம்: சுகாதார அமைச்சு

Menaka Mookandi   / 2012 நவம்பர் 17 , பி.ப. 03:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் பல பாகங்களிலும் கடந்த சில தினங்களாக பெய்த சிவப்பு மழைக்கு ட்ரெஷலோமொனஸ் எனப்படும் ஒருவகை பக்றீரியாவே காரணம் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. 

பதியதலாவ, ஹிங்குராங்கொட, செவனகல, மனம்பிட்டிய போன்ற பிரதேசங்களில் நேற்றும் நேற்று முன்தினமும் சிவப்பு மழை பெய்திருந்தது. இதன்போது சேகரிக்கப்பட்ட மழை நீர் நெனோ தொழில்நுட்ப நிறுவனத்தில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

இதன்போதே, ட்ரெஷலோமொனஸ் எனப்படும் பக்றீரியாவகை அதில் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த பக்றீயாக்கள் நிலத்தில் சரளமாக வாழக்கூடியவை எனவும் அவை சூழ்நிலைக்கேற்ப பச்சை அல்லது சிவப்பு நிறங்களாக தங்களை நிறம் மாற்றிக்கொள்ளத்தக்கவை என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .