2021 ஜனவரி 23, சனிக்கிழமை

காதலியின் கடவுச்சொல்லை கேட்ட காதலனுக்கு விளக்கமறியல்

Menaka Mookandi   / 2012 நவம்பர் 18 , பி.ப. 12:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

காதலியின் முகப்புத்தக கடவுச்சொல்லை கேட்டு அச்சுறுத்திய நபரொருவரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிஸை நீதவான் உத்தரவிட்டுள்ளார்

முகப்புத்தக கடவுச்சொல்லைத் தர மறுத்தால்,  அறையொன்றில்  இருவரும்அந்தரங்கமாக இருந்த புகைப்படங்களை இணையத்தளத்தில் வெளியிடுவேன் என்று மிரட்டியதாக காதலனுக்கு எதிராக அவரது காதலி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்நிலையில், பொலிஸாரால் கைது செய்யப்பட்ட மேற்படி நபருக்கு எதிராக காதலியை துஸ்பிரயோகம் செய்தமை மற்றும் காதலியின் புகைப்படங்களை எடுத்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் வழக்கு தொடரப்பட்டது.

இதனையடுத்து, சந்தேகநபர் கல்கிஸை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் நிரோஷா பெர்ணான்டோ உத்தரவிட்டார்.

இதேவேளை, சந்தேகநபரின் கணனியிலிருந்து அவருடைய காதலியில் புகைப்படங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (சுரஞ்ஜித் பெரேரா)

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .