2021 ஜனவரி 22, வெள்ளிக்கிழமை

ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு எச்சரிக்கை

Menaka Mookandi   / 2012 நவம்பர் 18 , பி.ப. 01:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

சட்டவிரோத மீன்பிடியை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்காவிடின் இலங்கை உட்பட அபிவிருத்தி அடைந்துவரும் எட்டு நாடுகளுக்கு எதிராக தடைவிதிக்கப்போவதாக ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தண்டம் விதிக்கும் திட்டம் எதனையும் தயாரிக்கவில்லை எனினும் உரிய நடவடிக்கை எடுக்க தவறும் பட்சத்தில் மீன்பிடி உபகரணங்களை விற்பதற்கு தடைவிதித்தல் போன்ற தண்டனைகளை இந்த நாடுகள் எதிர்கொள்ள வேண்டுமென ஒன்றியம் எச்சரித்துள்ளது. 

பனாமா, பெலிஸ், கம்போடியா, பிஜி, கினியா, டோகோ, இலங்கை, வனாட்டு ஆகிய நாடுகளுக்கே எச்சரித்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் மீன்பிடி ஆணையாளர் மரியா டமனாகி இது 'கறுப்பு பட்டியல் அல்ல ஆனால் ஒரு மஞ்சள் அட்டையாகும்' என தெரிவித்துள்ளார்.

இந்த நாடுகளது ஒத்துழைப்பின் மூலம் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என்று நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த எச்சரிக்கையை இலங்கை உதாசீனம் செய்தால், இலங்கையின் கடலுணவு ஏற்றுமதிக்கு ஐரோப்பிய ஒன்றியம் தடைவிதிக்கும் நிலை ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .