2025 ஜூலை 16, புதன்கிழமை

பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்கவும்: சமூக ஆய்வாளர் கருத்து

Kogilavani   / 2012 நவம்பர் 21 , மு.ப. 05:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்குவது சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்கு உதவும் என்று சமூக ஆய்வாளர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்குவதன் மூலம் சுற்றுலாத்துறையை மேம்படுத்த முடியும் என்றும்  தேவைப்படின் பாலியல் தொழிலாளர்களை வெளிநாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்ய வேண்டும் என்றும் தென்பகுதி மாகாண சபையின் ஆளுங்கட்சியின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்திருக்கின்ற நிலையிலேயே சமூக ஆய்வாளர் மேற்கண்டவாறு  தெரிவித்திருக்கின்றார்.

இது தொடர்பில் சமூக ஆய்வாளரான, சமூக அபிவிருத்திக்கான நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி சர்மிளா செய்யத் வெளிநாட்டு செய்தி சேவைக்கு மேலும் தெரிவிக்கையில்,

"பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்குவது சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்கு உதவும்.

இலங்கை ஒரு பாரம்பரிய கலாசாரங்களை பின்பற்றுகின்ற நாடு என்கின்ற போதிலும், அங்கு ஏற்கனவே பாலியல் தொழில் மிகவும் அதிகமான அளவுக்கு பரந்திருப்பதால், அதனை சட்டபூர்வமாக்குவது சுற்றுலாத்துறைக்கு நல்லது.  அதனால், அதில் ஈடுபடும் பெண்களுக்கு ஓரளவு பாதுகாப்பும் கிடைக்கும்.

ஏற்கனவே, பல கிராமிய மற்றும் சிறிய பெண்கள் ஏமாற்றப்பட்டு பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்டிருக்கும் நிலையில், இப்படியாக அந்த தொழில் சட்டபூர்வமாக்கப்படுவது, அவர்களுக்கு சிறிதளவாவது பாதுகாப்பை ஏற்படுத்தும்"  என்றார்.

You May Also Like

  Comments - 0

  • farzath Wednesday, 21 November 2012 09:05 AM

    இந்த மாதிரி ஒரு வார்த்தை ஒரு முஸ்லிம் பெண்ணிடமிருந்து வெளிப்படலாமா? இவருக்கு மன்னிப்பே இல்லை. இது சகல முஸ்லிம்களுக்கும் அவமானம். இந்த சமூக ஆய்வாளர் நிச்சயமாக முஸ்லிமாக இருக்க முடியாது?

    Reply : 0       0

    rahiz Thursday, 22 November 2012 05:49 PM

    3:14. பெண்கள், ஆண் மக்கள் பொன்னிலும், வெள்ளியிலுமான பெருங்குவியல்கள்; அடையாளமிடப்பட்ட (உயர்ந்த) குதிரைகள்; (ஆடு, மாடு, ஒட்டகை போன்ற) கால் நடைகள், சாகுபடி நிலங்கள் ஆகியவற்றின் மீதுள்ள இச்சை மனிதர்களுக்கு அழகாக்கப்பட்டிருக்கிறது; இவை(யெல்லாம் நிலையற்ற) உலக வாழ்வின் சுகப்பொருள்களாகும்; அல்லாஹ்விடத்திலோ அழகான தங்குமிடம் உண்டு.

    Reply : 0       0

    nawas Thursday, 22 November 2012 05:22 PM

    இஸ்லாம், முஸ்லிம்கள் நாங்கள், என்று வாய் கிழிய பேசிக்கொள்ளும் நம்மவர்கள், கைக்கூலி சீதனம் கொடுத்து மாப்பிள்ளையை வாங்கி கல்யாணம் பண்ணிக்கொள்ள வசதியில்லாத பெண்பிள்ளைகள் விபச்சாரிகளாக உங்கள் முஸ்லிம் சமூகத்தால் மாற்றப்பட்டுக்கொண்டிருக்கிறார்களே, இதற்கு என்ன சொல்லப் போகிறீர்கள்! உருவாக்குவதே நீங்கள் தானே......................

    Reply : 0       0

    Reshan Wednesday, 21 November 2012 06:18 PM

    ஒருவருடை கருத்து வெளியிடும் சுதந்திரம் என்றால் என்னவென்பதைப்பற்றி அறியாத மடைச்சாம்பிராணிகள்தான் இங்கே வந்து ஊழையிட்டுக்கொண்டிருக்கின்றன. இன்னமும் ஏன் நீங்கள் மதம் என்ற வட்டத்திற்குள் நின்றுகொண்டிருக்கின்றீர்கள்? முஸ்லிம் பெண் எப்படி இவ்வாறு கருத்துச் சொல்லலாம் என்று கூறுபவர்கள் அடிமுட்டாள்கள்.

    Reply : 0       0

    muaaz Wednesday, 21 November 2012 04:23 PM

    அல்லாஹ்வுக்கு பயந்த பெண் ஒருவரின் வாயால் இவ்வாறான வார்த்தை வெளிப்படாது.

    Reply : 0       0

    Mohammed Hiraz Wednesday, 21 November 2012 03:05 PM

    சொந்தங்களை சொந்த நாட்டில் வாழும் மதிப்பு மிக்க கன்னியமான பெண்களில் ஒரு கூட்டம் பாலியல் தொழிலாளிகளாக வீதியிலும் விடுதியிலும் சட்டபூர்வமாக அழைவதட்கு வக்காலத்து வாங்குவது முட்போக்குவாதமா??? வறுமையில் அன்றி வேரெதனால் விபச்சாரம் பெருகுகிறது என்று சொல்கிறீர்கள்??? உங்கள் கருத்து உண்மை என்று ஆகிவிடுமா? அப்படி எப்படி பாதுகாப்பு கிடைக்கும் என்கிறீர்கள் இதனால் அந்த கேவளத்தை செய்வோருக்கு???

    Reply : 0       0

    mohamadu shan Wednesday, 21 November 2012 01:31 PM

    இந்த மாதிரி ஒரு வார்த்தை ஒரு முஸ்லிம் பெண்ணிடமிருந்து வெளிப்படலாமா? இனி நாடு பூராவும் இவர் பெயர் அடிபடும்.

    Reply : 0       0

    Reshan Wednesday, 21 November 2012 12:57 PM

    அனுபவிக்க ஆசைப்படுபவன் கட்டாயம் அனுபவிப்பான் ஹிராஸ். நீங்கள் அவனை நிறுத்த முடியாது. இந்தச் சட்டம்மூலம் தொழிலில் ஈடுபடுபவர்களிற்கு பாதுகாப்பு வழங்கலாம். இன்று வறுமையில் வாடும் பலர் ஏனைய தொழிலைச் செய்யவதில்லையா? ஏன் அவர்கள் வறுமை என்றால் விபசாரம் செய்யத்தான் போகவேண்டுமா?? மாறாக அந்தத் தொழில் செய்பவர்கட்கு சட்ட ரீதியான பாதுகாப்பு வழங்கவே கேட்கப்படுகின்றது. பிற்போக்கு வாதச் சிந்தனைகளால் சூழப்பட்டிருக்கும் உங்களுக்கு நான் சொல்ல வருவது புரியாது. ஆகவே இத்துடன் விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துக்கொள்கின்றேன்.

    Reply : 0       0

    Mohammed Hiiraz Wednesday, 21 November 2012 11:58 AM

    Reshan வறுமையின் காரணமாக உடலை அந்நிய ஆண்களுக்கு விருந்தளித்து புலப்பு நடத்த உங்கள் தாயோ உங்கள் பிள்ளைகளோ உங்கள் சகோதரிகளோ முட்பட்டால் நீங்கள் அதனை வரவேற்று ஊக்க படுத்துவீர்களா??? சட்ட அங்கீகாரம் கொடுக்கப்பட்டால் இப்படியான சீரழிவுகளே நடக்கும். ஒவ்வொறு குடும்பங்களிலும் காலம் போனால் யாரும் யாரையும் திருமணம் முடிக்க முடியும் என்றும் சட்டம் கேட்பார்கள். அப்புறம் தாய் தந்தை பிள்ளைகள் சகோதரர்கள் என எந்த வித்தியாசமும் ஆசையையும் இச்சையையும் நோக்காக கொண்டு மிருகங்களை விட மோசமான வாழ்வுதான் மனிதனுக்கு மிச்சமாக இருக்கும். அந்த வாழ்கையில் ஆராய்ச்சி அபிவிருத்தி தேடல் கண்டு பிடிப்பு முன்னேற்றம் எல்லாம் அழிந்தொழிந்து போய் இருக்கும்.

    Reply : 0       0

    Mohammed Hiiraz Wednesday, 21 November 2012 11:53 AM

    கண்டதுகெல்லாம் பெண்களை சிவப்பு விளக்கு பகுதிக்கு விற்று வாழ்க்கை நடத்தும் கூட்டதிற்குதான் வாசியாக அமையும்?

    Reply : 0       0

    Mohammed Hiiraz Wednesday, 21 November 2012 11:52 AM

    # Reshan உங்கள் கருத்து மடத்தனமானது. பிளைப்புக்கு உடம்பை விட்பதால் எந்த நன்மையும் வராது. மக்களின் வாழ்விலும் அபிவிருத்தியிலும் தடை ஏட்படும். குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படும். ஒரு குடும்ப தலைவனுக்கு இப்படி ஆயிரம் பெண்களை அனுபவிக்க அனுமதி கொடுத்தால் அவனது ஊதியம் அதட்கே பத்தாமல் இருக்கும். இந்த நிலையில் அவனை நம்பி இருக்கும் அவன் மனைவி குழந்தைகளின் கதி??? ஆயிரம் பெண்களுடன் அனுபவிக்க ஆசைபடுபவனுக்கு வழி சமைத்துகொடுத்தால் எப்படி நாட்டிலடுத்த தலைமுறையை ஆரோக்கியமாகவும் நல்ல கல்வி வாய்புகளோடும் வளர்கும் நிலமை செழிப்பாகும் சமூகத்தில்???

    Reply : 0       0

    Faizal Wednesday, 21 November 2012 11:21 AM

    'இலங்கையில் பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்குவதன் மூலம் சுற்றுலாத்துறையை மேம்படுத்த முடியும்' இது சுற்றுலாத்துறையையா? அல்லது பாலியல் தொழிலையா? சர்மிலா....

    Reply : 0       0

    AZHAHIM Wednesday, 21 November 2012 09:55 AM

    "சிறகு முளைத்த பெண் " என்றால் சட்டபூர்வமாக விபச்சாரத்தில் ஈடுபடும் பெண் என்றா இவரது அர்த்தம்???

    Reply : 0       0

    Faizal Wednesday, 21 November 2012 09:32 AM

    “Good economist”

    Reply : 0       0

    Mohammed rafi Wednesday, 21 November 2012 09:19 AM

    ஆம் நான் இவரின் கருத்துக்கு உடன்படுகின்றேன். தவறு செய்பவரை விட தவறு செய்யத் தூண்டுபவருக்கே அதிக தண்டனையாகும் அல்லாஹூ அக்பர்.

    அல்லாஹ் இந்தப் பெண்ணிற்கு நேர்வழி காட்டுவாயாக.. அல்லது இந்தப் பெண்ணை இல்லாது செய்வாயாக.. நன்மை தீமை நல்லது தீயது பற்றிய ஞானம் உன்னை விட யாருக்கும் கிடையாது..நீயே இந்தப் பெண்ணுக்கு தீர்ப்பளிப்பாயாக..

    Reply : 0       0

    Azam Wednesday, 21 November 2012 06:10 AM

    சர்மிலாவிற்கு பிரபல்யம் அடைவதற்கு வேரு வழி கிடைக்கவில்லை பொலும்...

    Reply : 0       0

    Reshan Wednesday, 21 November 2012 08:58 AM

    இங்கே எதிராகக் கருத்திடும் பலரும் விபச்சாரம் சட்டமயமானால் முதல் வரிசையில் நிற்பர் என்பதே நிதர்சனம். யாரையும் கட்டாயம் பாலியல் தொழிலில் ஈடுபடுவதைத் தடுக்கவும் ஈடுபடுபவர்களிற்கு சட்டப் பாதுகாப்பு வழங்கவும் இந்தச் சட்டம் பயன்படும்.

    Reply : 0       0

    Abdul Wednesday, 21 November 2012 08:55 AM

    இஸ்லாத்தில் பிறந்த எல்லோரும் முஸ்லிமாக வாழ்வது கிடையாது, வெளிநாட்டில் கொஞ்சம் காலம் வேலை செய்துவிட்டு அந்நாட்டு பிரஜாவுரிமை கேட்பது போல் இது இருக்கிறது. சர்மிளா சொன்னதற்காக நிச்சயம் அல்லாஹ் அவருக்கு கூலி வழங்குவான்.

    Reply : 0       0

    resmin Wednesday, 21 November 2012 08:39 AM

    இவருக்கு மன்னிப்பே இல்லை. இது சகல முஸ்லிம்களுக்கும் அவமானம்.

    Reply : 0       0

    sano Wednesday, 21 November 2012 08:35 AM

    இவங்களையெல்லாம் யார் சமூக ஆர்வலர் என்றது?

    Reply : 0       0

    Mohamed Husssain Wednesday, 21 November 2012 08:09 AM

    மார்கம் என்ன சொல்கின்ற‌து என்று தெரியாதவர்கள் எல்லாம் சமூகம் பற்றி கருத்து சொல்ல வந்தால் இப்படித்தான் இருக்கும் என்பதற்கு ந‌ல்ல உதரணம் சர்மிளா அவர்கள் தான்! நீங்கள் உண்மையான முஸ்லிமாக இருந்தால் அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்.

    Reply : 0       0

    Thaha Muzammil Wednesday, 21 November 2012 07:51 AM

    சிலருக்கு குறுகிய காலத்தில், குறுக்கு வழியிலாவது, பிரபல்யம் அடைவதற்கு ஆசை. அதற்காகவே அவர் இப்படி செய்தாரோ தெரியவில்லை. இனி நாடு பூராவும் அவர் பெயர் அடிபடும் என்பதில் சந்தேகமில்லை.

    Reply : 0       0

    Lankan1st Wednesday, 21 November 2012 07:28 AM

    எந்த மதமும் விபச்சாரத்தை அனுமதிக்கவில்லை. அது மானக்கேடான செயல் ஒன்றே. இதை இஸ்லாம் வன்மையாக கண்டிக்கிறது. இஸ்லாத்தில் இருந்து கொண்டு எப்படி உங்களால் இது போல் ஒரு கருத்தை சொல்ல முடிந்தது? நாட்டின் நிலைப்பாட்டை கருத்தில் கொண்டு உங்களால் எப்படி விபச்சாரத்தை அனுமதிக்க முடியும்? மாறாக உரிய தண்டனை வழங்கப்படும் போது விபச்சாரம் இல்லாமல் போகும்.

    Reply : 0       0

    wahab Wednesday, 21 November 2012 07:19 AM

    அப்ப தொழில தொடங்க போரிங்கணு சொல்லுங்க‌.

    Reply : 0       0

    mily rox Wednesday, 21 November 2012 07:08 AM

    hope sarmila gone mad. tourism will never come up cos of this.

    Reply : 0       0

    mohamed Wednesday, 21 November 2012 06:49 AM

    யார் இந்த சர்மிளா? இவருடன் எப்படி தொடர்பு கொல்ல முடியும்?

    Reply : 0       0

    kalan Wednesday, 21 November 2012 06:31 AM

    இந்த சமூக ஆய்வாளர் நிச்சயமாக முஸ்லிமாக இருக்க முடியாது? அப்படி இருந்தால் இவரை கல் எறிந்து கொல்ல வேண்டும்.

    Reply : 0       0

    Hassan Wednesday, 21 November 2012 06:29 AM

    இந்த மாதிரி ஒரு வார்த்தை ஒரு முஸ்லிம் பெண்ணிடமிருந்து வெளிப்படலாமா?

    Reply : 0       0

    Mohammed Hiiraz Wednesday, 21 November 2012 06:15 AM

    சமூகத்தில் கள்ளத்தனமாக விபச்சாரம் நடந்தால் அதற்குறிய தீர்வை எழுத்தாளர்கள் சொல்ல வேண்டுமே ஒழிய களவு,கொலை, தற்கொலை நடக்கிறது என்பதற்காக அவைகளை சட்டபூர்வ செயற்பாடாக அங்கீகரிக்க கோருவது எவ்வளவு மடத்தனமானதோ அதைவிட மடத்தனமானது இந்த கோரிக்கை ஆதரிப்பும்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .