2021 ஜனவரி 25, திங்கட்கிழமை

யாழ்., ஹட்டனில் இருவரை காணவில்லை

Menaka Mookandi   / 2012 நவம்பர் 21 , மு.ப. 11:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சுமித்தி, ஆர்.கமலி)

யாழ்ப்பாணம் மற்றும் ஹட்டன் ஆகிய இரு பிரதேசங்களைச் சேர்ந்த ஆண்கள் இருவரைக் காணவில்லை என்று அவர்களின் உறவினர்களால் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

யாழ், வேலணை பகுதியைச் சேர்ந்த சதாசிவம் லோகேஸ்வரன் (வயது 35) என்பவர் இன்று அதிகாலை முதல் காணாமல் போயுள்ளார் என யாழ் மனித உரிமை ஆணைக்குழுவிலும் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை 2.45 மணியளவில் குறித்த நபரின் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அவரை அழைத்துச் சென்றதாகவும் அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை என்றும் காணாமல் போனவரின் தாயார் முறைப்பாடு செய்துள்ளார்.

இதேவேளை, ஹட்டன், நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எல்பட மேற்பிரிவைச் சேர்ந்த 45 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையான அருளானந்து சிமியோன் என்பவரைக் கடந்த 14ஆம் திகதி முதல் காணவில்லை என அவரது மனைவி மற்றும் சகோதரி ஆகிய இருவரும் பொலிஸ் நிலையங்களில்  முறைப்பாடு செய்துள்ளனர்.

கடந்த 10ஆம் திகதி கொழும்பு – வெல்லம்பிட்டியில் உள்ள தனது சகோதரரின் வீட்டுக்கு செல்வதாக கூறி கொழும்புக்கு சென்றவரை கடந்த 14ஆம் திகதி முதல் காணவில்லை என அவரின் சகோதரி, வெல்லம்பிட்டிய பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இவ்விரு சம்பவங்கள் தொடர்பிலும் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .