2021 ஜனவரி 21, வியாழக்கிழமை

மனித உரிமைகள் குறித்து கவனம் செலுத்தப்படும்:செக். தூதுக்குழுவிடம் ஹக்கீம்

Super User   / 2012 நவம்பர் 21 , மு.ப. 11:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் விதந்துரைகளை செயல்படுத்தும் போது மனித உரிமைகள் தொடர்பான விடயங்களில் கையாள உள்ள வழிமுறைகள் பற்றி கூடுதல் கவனம் செலுத்தப்படும் அந்த  விதந்துரைகளையும் இரவோடு இரவாக நடைமுறைப்படுத்துவது அறவே சாத்தியமற்ற என நீதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

இதற்கான கால வரையறைகளை ஜனாதிபதி செயலணி அடையாளப்படுத்தி உள்ளதாகவும்; நீதியமைச்சர் குறிப்பிட்டார்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள செக் குடியிரசின் நாடாளுமன்ற தூதுக்குழுவினருக்கும் அமைச்சர் ஹக்கீமிற்கும் இடையிலான நீதி அமைச்சில் இடம்பெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

செக் குடியரசின் நால்வர் அடங்கிய உயர்மட்ட தூதுக்குழுவுக்குவினருக்கு மனித உரிமைகளுக்கான தேசிய செயற்திட்டத்தின் பிரதியொன்றை நீதி அமைச்சின் செயலாளர் கமலினி டி சில்வா அமைச்சர் ஹக்கீம் முன்னிலையில் கையளித்தார்.

கற்றறிந்த பாடங்கள், மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் விதந்துரைகள் எவ்வாறு படிப்படியாக செயல்படுத்தப்படும் என்பது சரிவர இனங்காணப்பட்டிருப்பதாகவும், நீதித்துறை சார்ந்த அதன் முக்கிய அம்சங்கள் மீது தமது அமைச்சின் கவனம் பெரிதும் ஈர்க்கப்பட்டுள்ளது.

சர்வதேச சமூகத்தின் ஒரு நம்பிக்கை வாய்ந்த உறுப்பினர் என்ற முறையில் யுத்தத்திற்கு பிந்திய கடப்பாடுகளை இலங்கை நன்கு மதிப்பதாகவும், 30 ஆண்டு காலமாக நீடித்த கோர யுத்தத்தின் பின்னர் நாடு மீண்டும் விழித்தெழுகின்ற சூழ்நிலையில் ஆணைக்குழுவின் அனைத்து விதந்துரைகளையும் இரவோடு இரவாக நடைமுறைப்படுத்துவது அறவே சாத்தியமற்றதாகும்.

ஆயினும் விதந்துரைகளை அமுல்படுத்துவதும் புனர்வாழ்வு புனரமைப்பு நடவடிக்கைகளை கட்டம் கட்டமாக செயல்படுத்துவதும் கவனத்திற் கொள்ளப்பட்டுள்ளது. இலங்கையின் நீதிமன்றங்களின் கட்டமைப்பு பற்றியும் மிகவும் வெற்றிகரமாக இந்நாட்டில் செயல்பட்டுவரும் இணக்க சபைகளின் செயல்பாடுகள் பற்றியும் அமைச்சர் ஹக்கீம் எடுத்துரைத்தார்.

யுத்தத்திற்கு பிந்திய இன்றைய சுமூகமான சூழலில் அவற்றின் பயன்பாடு நாட்டின் வடகிழக்கு மாகாணங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டிருப்பது பற்றியும், 6,000 சுயேட்சை உறுப்பினர்கள் நாடளாவிய ரீதியில் அவற்றில் பணியாற்றுவது பற்றியும், சர்ச்சைக்குரிய பல்வேறு கொடுக்கல் வாங்கல்கள், நிலபுலன்கள் பற்றிய விவகாரங்களுக்கு அவற்றினூடாக இணக்கத் தீர்வுகளை காண்பது பற்றியும் அமைச்சர் விபரித்தார்.


  Comments - 0

  • Kanavaan Wednesday, 21 November 2012 06:21 PM

    ஹக்கீம் சார், என்ன கற்றறிந்த மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் விதந்துரைகளை செயல் படுத்தும் ஐடியாக்கள் ஏதாச்சும் அரசாங்கத்திற்கு இருக்கா அல்லது நீங்க அரசாங்கதிற்குப் பிடிக்கும் எவெரெடி, வின்செஸ்ட்டரா? கவனம் சார், நீங்க செய்ற வேலைக்கு முஸ்லிம்கள் உங்களோட மிச்ச‌ம் சந்தோஷமாக இருக்காங்க.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .