2021 ஜனவரி 23, சனிக்கிழமை

எச் ஐ வி தொற்று வீதத்தில் பெரும் வீழ்ச்சி: ஐ.நா

Kogilavani   / 2012 நவம்பர் 22 , மு.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

'எச் ஐ வி தொற்று ஏற்படும் வீதத்தில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதேவேளை இதற்கான சிகிச்சைகளின்போது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகமான மக்கள் பயன் பெறுகின்றனர்' என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

இந்த தொற்று நோய் பரவுதல் வரலாறு காணாத அளவுக்கு குறைந்துள்ளதாக, ஐக்கிய நாடுகள் சபையின் எயிட்ஸ் நிறுவனம் விபரிக்கிறது.

'புதிய எச்.ஐ.வி தொற்றுகள், குறைந்த மற்றும்; நடுத்தர வருமான நாடுகளில் 50 சதவீதத்தால் குறைந்திருக்கின்றது. மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள ஆப்பிரிக்க நாடுகளிலேயே குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளது.

சிகிச்சையும் முன்னேற்றம் கண்டிருக்கிறது. தொற்று ஏற்பட்டவர்களில் அரைவாசிக்கும் அதிகமானோர் வைரஸ் எதிர்ப்பு மாத்திரகளை பெறுகிறார்கள். மாலாவியில் 73 சதவீதத்தாலும் பொட்ஸுவாலாவில் 71 சதவீதத்தாலும் நமீபியாவில் 68 சதவீதத்தாலும் சம்பியாவில் 58 சதவீதத்தாலும் சிம்பாப்வேயில் 50 சதவீதத்தாலும் தென்னாபிரிக்கா மற்றும் சுவாஸிலாந்தில் 41 சதவீதத்தாலும் புதிய எயிட்ஸ் தொற்று குறைவடைந்துள்ளதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

கீழ் சகாரா ஆபிரிக்காவில் எயிட்ஸ் மரணங்கள் ஆறில் ஒரு பங்காக வீழ்ச்சி கண்டுள்ளது. இந்த நோய்க்கு சிகிச்சை பெறுவோரின் தொகை 59 சதவீதத்தால் அதிகரித்துள்ளது. தென்னாபிரிக்காவில் எயிட்ஸ் விடயத்தில் 1.6 பில்லியன் டொலரை உள்நாட்டு நிதியிலிருந்து செலவளித்துள்ளது.

சிறுவர்களில் எச்.ஐ.வி வைரஸ் தொற்றுவதைக் குறைப்பதில் ஆகவும் கூடுதல் முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. எச்.ஐ.வி தொற்றுடன் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சிறுவர்களில் எச்.ஐ.வி தொற்றை பூரணமாக இல்லாதொழிப்பது சாத்தியம் என்பது இப்போது தெரிகின்றது' என ஐக்கிய நாடுகள் சபையின் எயிட்ஸ் நிறைவேற்றுப் பணிப்பாளர் சித்திப் கூறியுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .