2021 மே 18, செவ்வாய்க்கிழமை

சபாநாயகருக்கு சம்பந்தன் கடிதம்

Kanagaraj   / 2012 டிசெம்பர் 13 , மு.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் அமர்வுகள், அமர்வின் அறிக்கைகள் எதுவும் தனக்கு இதுவரை கிடைக்கவில்லை என்று தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினரும் மற்றும் தெரிவுக்குழுவின்  உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்

இது தொடர்பில் அவர் சபாநாயகர் சமல் ராஜபக்ஷவிற்கு இன்று வியாழக்கிழமை கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.

அந்தக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் அமர்வுகள், அமர்வின் அறிக்கைகள் எதுவும் டிசெம்பர் மாதம் 4 ஆம் திகதி  எனக்கு கிடைக்கவில்லை என்பதை தங்களின் கவனத்துக்கு கொண்டுவருகின்றேன்.

டிசெம்பர் 8 ஆம் திகதி  நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதாகக் கூறப்படும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கையின் பிரதியும் எனக்கு தரப்படவில்லை.

அந்த அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு முன்னர் அதன் வரைவோ அல்லது அறிக்கையோ எனக்கு தரப்படவில்லை. இறுதி அறிக்கை  சமர்ப்பிக்கப்பட்டதாகக் கூறப்படினும் அது எனக்கு இன்னும் அனுப்பிவைக்கப்படவில்லை.

இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுத்து அந்த அறிக்கை எனக்கு கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்குமாறும் மேற்படி ஆவணங்களை இயன்றளவு விரைவாக எனக்கு அனுப்பிவைக்க ஆவண செய்யுமாறும் அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .