2021 மே 08, சனிக்கிழமை

வியாக்கியானத்திற்காக அனுப்பப்பட்ட மனுக்களில் குறைபாடு: சட்டமா அதிபர்

Kanagaraj   / 2012 டிசெம்பர் 13 , பி.ப. 08:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப்பிரேரணை தொடர்பிலான விசாரணையின் போது அரசியலமைப்பின் வியாக்கியானத்திற்காக அனுப்பப்பட்டுள்ள மனுவில் குறைபாடுகள் இருப்பதாக சட்டமா அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி பாலித்த பெர்னண்டோ சுட்டிக்காட்டினார்.

அரசியலமைப்பின் வியாக்கியானத்தை கேட்டு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் உயர்நீதிமன்றத்திற்கு அனுப்பிவைத்துள்ள மனுக்களிலேயே குறைபாடு இருப்பதாக அவர் நேற்று சுட்டிக்காட்டியுள்ளார்.

வியாக்கியானம் கோரல் தொடர்பிலான மனுமீதான விசாரணை நீதியரசர் காமினி அமரதுங்க தலைமையிலான மூன்று நீதியரசர்கள் குழு முன்னிலையில் நேற்று வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே சட்டமா அதிபர் தனது எதிர்ப்பினை தெரிவித்தார்.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் வியாக்கியானத்திற்காக உயர்நீதிமன்றத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள ஆறு மனுக்களிலும் இவ்வாறான குறைபாடுகள் இருப்பதாக சட்டமா அதிபர் சுட்டிக்காட்டினார்.

மேன்முறையீட்டு நீதிமன்றம் இது தொடர்பில் முறைப்பாட்டாளர்கள் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்திடம் விளக்கங்களை கோரியிருக்கவேண்டும் எனினும் அவ்வாறான எதுவும் இடம்பெறவில்லை என தனது வாதத்தை முன்வைத்த சட்டமா அதிபர் இந்த மனுக்களை விசாரிப்பதில் அர்த்தமில்லை என்றும் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.

இந்நிலையில் இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று வெள்ளிக்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X