2021 மே 06, வியாழக்கிழமை

வலஸ்கமுவவிற்கு படகு அனுப்புவதில் சிரமம்

Kanagaraj   / 2012 டிசெம்பர் 18 , மு.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

வலஸ்முல்லவிலுள்ள வலஸ்கமுவ தேசிய பூங்காவில் சிக்குண்டுள்ளவர்களுடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் அங்கு படகுகளை அனுப்புவதில் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக பக்கமுன பொலிஸார் தெரிவித்தனர்.

தேசிய பூங்காவிற்குள் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் இவர்கள் பூங்காவிற்குள் சிக்குண்டுள்ளனர். சுற்றூலாத்துறையினருடன் கண்டி மற்றும் பக்கமுன இளைஞர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை வலஸ்முல்லைக்கு சென்றவர்களே இவ்வாறு சிக்குண்டுள்ளதாகவும் இவர்களை மீட்பதற்காக இராணுவ மற்றும் கடற்படையினரை ஈடுபடுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

எனினும், அவர்களுடனான தொடர்புகள் யாவும் துண்டிக்கப்பட்டுள்ளமையினால் அவர்கள் சிக்கியுள்ள இடத்திற்கு படகை அனுப்புவதில் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக பொலிஸார் இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .