2021 ஜனவரி 25, திங்கட்கிழமை

குற்றப்பிரேரணை விவாதத்தை மட்டுப்படுத்த தீர்மானம்

Kanagaraj   / 2012 டிசெம்பர் 27 , பி.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான குற்றப்பிரேரணை மீதான விவாதத்தை இரண்டு நாட்களுக்கு மட்டுப்படுத்துவதற்கு ஆளும் தரப்பினர் தீர்மானித்துள்ளதாக நம்பகரமான வட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றது.

ஜனவரி மாதம் 10 ஆம் மற்றும் 11 ஆம் திகதிகளில் மட்டுமே நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் இது தொடர்பில் கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

நாடாளுமன்றத்தின் 2013 ஆம் ஆண்டிற்கான அமர்வு 8 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும். அன்றைய தினம் வாழ்வின் எழுச்சி (திவிநெகும) சட்டமூலம் திருத்தங்களுடன் சபையில் நிறைவேற்றப்படும்.

மறுநாள் 9 ஆம் திகதி எதிர்க்கட்சியின் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணைக்கான நேரத்தை ஒதுக்கி கொடுப்பதற்கு டிசம்பர் மாதம்  ஆரம்பத்தில் நடத்தப்பட்ட கட்சித்தலைவர்களி கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .