2020 ஒக்டோபர் 30, வெள்ளிக்கிழமை

அமெரிக்க வர்த்தகக் குழு இலங்கைக்கு விஜயம்

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 07 , மு.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

பல்துறை அமெரிக்க வர்த்தகக் குழுவொன்று இந்திய விஜயத்தைத் தொடர்ந்து இம்மாதம் 8ஆம் அல்லது 9ஆம் திகதிகளில் கொழும்புக்கு வருகின்றது. 

இலங்கையில் யுத்தம் முடிவடைந்த பின்னர் முதன்முதலில் இக்குழுவினர் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்கின்றனர்.

கல்வித்துறை, வடிவமைப்பு ஆலோசனைச் சேவைகள், மற்றும் பொறியியல், உணவு தொழில்கள், சுகாதாரம், விமானசேவை ஆதரவு மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்தி ஆகிய கம்பனிகளை உள்ளடக்கிய 3சி வர்த்தகக் குழுவே   இலங்கைக்கு வருகின்றது. 

இக்குழுவினர் முன்னர் இந்தியாவின் சென்னை மற்றும் கொச்சிக்கான விஜயத்தை மேற்கொண்டனர். அமெரிக்க தூதரகம் இருதரப்பு வர்த்தக உறவுகளை அதிகரிப்பதற்கு முயல்வதுடன், ஆகவும் கூடிய இலங்கையின் ஏற்றுமதிக்கான தனியொரு நாடாக அமெரிக்கா உள்ளதென அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

  Comments - 0

  • KB Thursday, 07 February 2013 07:33 AM

    பிரேரணையைக்காட்டி பேரம் பேசவோ வருகினம்?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--