2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

மூன்று பொலிஸார் மீது அசிட் வீச்சு

Kanagaraj   / 2013 பெப்ரவரி 09 , மு.ப. 07:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

சந்தேகநபர் ஒருவரை கைது செய்யவதற்காக சென்றிருந்த  பொலிஸார் மீது அசிட் வீச்சப்பட்ட சம்பவம் ஒன்று கேகாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது.

கேகாலை தெதிகம பிரதேசத்திலேயே இந்த சம்பவம் இன்று சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

தெதிகம - இகல லெனகல பிரதேச வீடொன்றில் சந்தேகநபர் ஒருவர் தங்கிருப்பதாகக் கிடைத்த தகவலை அடுத்து தெதிகம பொலிஸார் அங்கு சென்றுள்ளனர்.

குறித்த வீட்டை சோதனைக்கு உட்படுத்தி கொண்டிருந்த போதே சந்தேகநபரும் அவருடைய மனைவியும் பொலிஸார் மீது அசிட் வீசியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எரி காயங்களுக்கு இலக்கான பொலிஸார் மூவரும் கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அசிட் வீசியதாக கூறப்படும் சந்தேகநபரின் மனைவியை கைது செய்துள்ளதாக தெரிவித்த கேகாலை பொலிஸார் குறித்த சந்தேகநபர் பல திருட்டு குற்றங்களில் ஈடுபட்டவர் என்றும் அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .