2020 ஒக்டோபர் 21, புதன்கிழமை

நாடாளுமன்ற தெரிவுக்குழு தீர்ப்புக்கெதிரான மனுவை விசாரிக்க முடிவு

Kanagaraj   / 2013 பெப்ரவரி 12 , பி.ப. 08:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எஸ் செல்வநாயகம்

நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் தீர்மானத்தை செல்லுப்படியற்றது என மேன்முறையீட்டு நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆணைக்கோர் மனுத்தொடர்பில் தலையிடுமாறு சட்டத்தரணி சுமுது காந்தா மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவில் சபாநாயர் சமல் ராஜபக்ஷ, நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் அங்கத்தவர்கள் 11 பேர், நாடாளுமன்ற செயலாளர் நாயகம், சட்டமா அதிபர் ஆகியோரே மனுவில் பிரிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X