2020 ஒக்டோபர் 23, வெள்ளிக்கிழமை

இலங்கைக்கு ஆயுத விற்பனை; பிரித்தானிய மறுப்பு

Super User   / 2013 பெப்ரவரி 20 , மு.ப. 06:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை இராணுவத்திற்கு கடந்த வருடம் இரண்டு மில்லியன் ஸ்ரேலிங் பவுணிலும் கூடுதல் பெறுதியான சிறிய ரக ஆயுதங்களை விற்பனை செய்ததாக வெளிவந்துள்ள செய்திகளை பிரித்தானிய மறுத்துள்ளது.

ஆயுதங்களை ஏற்றுமதி செய்வதற்கான அனுமதியை பெற்று மில்லியன் பவுண் கணக்கில் பெறுமதியான சிறிய ரக ஆயுத தளபாடங்கள், வெடி பொருட்கள் மற்றும்  பல்வேறு இராணுவ கருவிகள் கடந்த வருடம் பிரித்தானியாவிலிருந்து இலங்கைக்கு ஏற்றுமதி செய்யப்பட்டதாக லண்டனை தளமாக கொண்ட இன்டிபென்டன்ற் செய்தி வெளியிட்டிருந்தது.

"பிரித்தானியா இலங்கை இராணுவத்திற்கான சிறிய ரக ஆயுத ஏற்றுமதிக்கு அனுமதியளிக்கவில்லை. பிராந்தியத்தில் இடம்பெறும் கடல் கொள்ளையை தடுப்பதற்காக தனியார் பாதுபாப்பு கம்பனிகளுக்கான சிறிய ஆயுதங்கள் உட்பட சிறிய ரக ஆயுதங்களின் ஏற்றுமதிக்கான அனுமதியே வழங்கப்பட்டிருந்தது" என வெளிவிவகாரங்களுக்கான உதவி இராஜாங்க செயலாளர் அலிஸ்ரெய்ர் பேட் ரூவிற் செய்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X