2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

பிரித்தானிய எம்.பிக்கள் கூட்டமைப்புடன் சந்தித்துப்பேச்சு

Kanagaraj   / 2013 ஜூலை 23 , மு.ப. 11:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பிரித்தானிய நாடாளுமன்றக் குழுவினர் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்துப்பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

இந்த சந்திப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின், கிளிநொச்சி மாவட்ட அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.

இதில் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களுடன், இலங்கையிலுள்ள பிரித்தானிய தூதுவராலயத்தின்  உயரதிகாரிகளும் பங்குபற்றினர்.

கூட்டமைப்பின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா மற்றும் ஸ்ரீதரன் ஆகியோர் பங்குப்பற்றினர்.

இந்த சந்திப்பின் போது யுத்தத்திற்கு பின்னரான வடமாகாணத்தின் நிலைமை தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

போருக்கு பின்னரான காலத்தில் மீள்குடியேற்ற நடவடிக்கை மற்றும் வாழ்வாதார நிலைமைகள், மாகாண சபைத் தேர்தல்கள் ஆகியவை குறித்து ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

பல பகுதிகளில் இராணுவம் தொடர்ந்து மக்களின் காணிகளை ஆக்கிரமித்துள்ளதாவும், இதன் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் சொந்த இடங்களில் மீள்குடியேற முடியாத ஒரு சூழல் உள்ளது என்றும் சுட்டிக்காட்டியதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X