2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

ஹிங்குராங்கொட பிரதேசசபை உறுப்பினர் விபத்தில் மரணம்

Suganthini Ratnam   / 2013 ஜூலை 25 , மு.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஹிங்குராங்கொட  பிரதேச சபை உறுப்பினர் ஆர்.பி.ரத்நாயக்க விபத்தில் மரணமடைந்துள்ளார்.

மின்னேரியாவிலுள்ள பாலத்தை விட்டு  வாகனம் கவிழ்ந்து விபத்திற்குள்ளான நிலையிலேயே இவர் மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று புதன்கிழமை இரவு இவர் ஹிங்குராங்கொடவிலிருந்து தனது வீட்டுக்குச் செல்லும் வழியிலேயே விபத்திற்குள்ளானாரெனவும் பொலிஸார் கூறினர்.

இவர் முன்னர் சமுத்தி உத்தியோகத்தராகப் பணியாற்றியிருந்தார். (கே.ஜி.கருணாரட்ன)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .