2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

முழந்தாளிட்ட ஆசிரியையின் வீட்டுக்கு பாதுகாப்பு

Kanagaraj   / 2013 ஜூலை 26 , மு.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஆனந்த சரத்குமாரவினால் முழந்தாளிட வைத்ததாக கூறப்படும் நவகத்தேகம பாடசாலை ஆசிரியையின் வீட்டுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவின் பேரிலேயே வியாழக்கிழமை இரவு முதல் இவ்வாறு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

இரண்டு பொலிஸாரே ஆசிரியையின் வீட்டில் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஆசிரியையை  முழந்தாளிடவைத்த  முன்னாள் உறுப்பினர் ஆனந்த சரத்குமார   பிணை நிபத்தனைகளை மீறினார் என்ற குற்றச்சாட்டின் பேரில்  எதிர்வரும் 8 ஆம் திகதி வரையிலும் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--