2020 ஒக்டோபர் 31, சனிக்கிழமை

'பிணை நிபந்தனைகளில் வேறுபாடு காணப்படுகின்றது'

Super User   / 2013 ஜூலை 29 , பி.ப. 08:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-லக்மல் சூரியகொட

அரசியல் ரீதியாக செல்வாக்கு உள்ளவர்களுக்கும் சாதாரண மக்களுக்கும் இடையில் பிணை வழங்கும் போது விதிக்கப்படும் நிபந்தனைகளில் வெளிப்படையாக தெரியும் வேறுபாடுகள் இருப்பதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் கூட்டத்தில் கவலை வெளியிடப்பட்டது என அச்சங்கத்தின் தலைவர் உபுல் ஜயசூரிய தெரிவித்தார்.

தண்டிக்கப்படமாட்டார்கள் என தெரிந்துகொண்டு அவர்கள் பல குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர். சில அதிகாரிகள் இவர்களுக்கு எதிராக முறைப்பாடுகளை ஏற்கவும் சட்ட நடவடிக்கை எடுக்கவும் தயங்குகின்றனர் என அவர் குறிப்பிட்டார்.

சாட்சிகளுக்கு பயமுறுத்தல் விடுத்ததன் மூலம் பிணை நிபந்தனைகளை மீறியதாக முன்னாள் மாகாண சபை உறுப்பினரை மீண்டும் விளக்கமறியலில் வைத்த புத்தளம் நீதவான் ரங்க திசாநாயக்கவை பாராட்ட வேண்டும் என சட்டத்தரணிகள் சங்கம் தீர்மானமொன்றை நிறைவேற்றியுள்ளது என அவர் தெரிவித்தார்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--