2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

என் மகனை கடத்த முயற்சி: மேர்வின்

Kanagaraj   / 2013 ஜூலை 29 , பி.ப. 06:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

நகர மண்டப வளாகத்திலுள்ள பிரபல்யமான ஆடை விற்பனை நிலையத்திற்கு அருகில் வைத்து எனது மகனை 12 பேர் சேர்ந்து கடத்துவதற்கு முயற்சித்துள்ளனர் என்று பொது மக்கள் உறவுகள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்தார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

நான் வீட்டிலிருந்து போது என் மகனிடமிருந்து தொலைபேசி அழைபொன்று வந்தது. தன்னை தாக்குதவதாகவும் தெரிவித்தார். உடனடியாக நான் புறப்பட்டு ஸ்தலத்திற்கு விரைந்தேன். பொலிஸாருக்கும் அறிவித்துள்ளேன். பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

என் மகனை 12 பேர் ஏன்? தாக்கவேண்டும்.அவன் ஒரு உறுதியான நிலைப்பாட்டில் இருப்பதனால் நான் சந்தோஷமாக இருக்கின்றேன். மகனுக்கு எவ்விதமான ஆபத்தான காயங்களும் இல்லை. என்னுடைய குடும்ப உறுப்பினர்களை ஜே.வி.பி மற்றும் ஐ.தே.க கொன்றொழித்தனர் என்பதனையும் ஞாபகமூட்டவிரும்புகின்றேன் என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--