2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

நீர் மாசுபடுதலை தடுக்க தவறியமையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2013 ஓகஸ்ட் 01 , மு.ப. 10:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

கம்பஹா மாவட்டத்திலுள்ள பல பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறையை உருவாக்கியுள்ள நிலத்தடி நீர் மாசுபடுதலை அதிகாரிகள் தடுப்பதற்கு  தவறியமையை கண்டித்து 1,000 இற்கும் அதிகமான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வெலிவெரிய சந்தியில் புதிய கண்டி வீதியை இடைமறித்தே இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொழிற்சாலையொன்றிலிருந்து வரும் கழிவு நீர் காரணமாகவே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர். (உபாலி ரணவீர)

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--