2020 ஒக்டோபர் 30, வெள்ளிக்கிழமை

தமிழருக்கு சுடுகாடும் இரத்தமுமா? அரசு விளக்கமளிக்க வேண்டும்: குமரகுருபரன்

Kanagaraj   / 2013 ஓகஸ்ட் 02 , மு.ப. 11:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

'தமிழ் மக்களையும் நாட்டையும் காப்பாற்றுவதற்கு அரசாங்கம் தயாராக  வேண்டும். ஏனென்றால் வடமாகாண சபை தேர்தலில்  நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் முதலமைச்சரானால்  தமிழருக்கு சுடுகாடும் இரதத்தமும் கண்ணீரும்தான் உறுதி" என்று அமைச்சர் சம்பிக்க ரணவக்க கூறியிருப்பது பாரதூரமான விடயமாகும் என்பதனால் அந்த கூற்று தொடர்பில் அமைச்சர் நாட்டுமக்களுக்கு விளக்கமளிக்கவேண்டும் என்று மேல் மாகாண சபையின் உறுப்பினரும் ஜ,ம.மு பிரதித்தலைவருமான  டாக்டர் நல்லையா குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் சம்பிக்க ரணவக்க கூறியிருப்பது பெரும் பாரதூரமான விடயமாகும் . மீண்டும்  நாட்ட    நாட்டையும் தமிழ்     மக்களையும் காப்பாற்ற அரசு தயாராக  வேண்டும்.இதற்கான தெளிவான விளக்கத்தை  அமைச்சர் கொடுக்கவேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

தமிழருக்கு எதிரான மிக மோசமான    இனப்படுகொலையை  ஏற்படுத்த  அமைச்சர்  சம்பிக்க  ரணவக்க  சக்திகளை  தயாராக்க   போகின்றார? அல்லது இத்தகவல் அமைச்சருக்கு எப்படித்தெரியும் ?  சுடுகாடும்  ,இரத்தமும் கண்ணீரும் தான் தமிழருக்கு உறுதி என்கின்றார் இது இன சௌஜன்யத்தை குலைக்கும் செயல்,மீண்டும் ஒரு இனக்கலவரமா ?    பாதுகாப்பு   அமைச்சு   இதைக்கவனத்தில் கொள்ளவேண்டும்  என்றும் அவர் கோரியுள்ளார்.

நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் முதலமைச்சரானால் தமிழருக்கு  சுடுகாடும், இரத்தமும் கண்ணீரும் தான்    உறுதி'  என்று பாட்டலி சம்பிக்க ரணவக்க பயமுறுத்துவது  இந்த பல்லின, மத மத குடிப்பரம்பல் உள்ள நாட்டில் அடிப்படை உரிமைகளை சம உரிமை கொண்டு அனுபவித்தலுக்கு குந்தகமாகும்.

 சி .வி.விக்னேஸ்வரன்  போன்ற  படித்த பண்பாளர்கள்  ஆற்றலில்வல்லவர்களை  கண்டு புலி  முத்திரை குத்த முடியவில்லையே  என்று சம்பிக்க ரணவக்க பிதற்றுகின்றாரா ? அல்லது  இப்பெருந்தகையை  ஆயுதமேந்திய இயக்கத்தின் தலைவர் என்கின்றாரா? வேறு ஒருவர் பெயர் இந்த இடத்தில் பிரேரிக்கப்பட்டிருந்தாலும் இதே கருத்தைத்தான் அமைச்சர் கூறியிருப்பார் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

 சம்பிக்க ரணவக்ககூறியிருப்பது இருப்பது பெரும் பாரதூரமான விடயம் .இதனையே ஒரு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் கூறியிருந்தால் புலனாய்வுபிரிவினர்  அழைத்திருப்பார்கள்    எனவே, உண்மை நிலையை ஆராய்ந்து அரசாங்கம் மக்களுக்கு ஏற்றப்பட்டு இருக்கின்ற பீதியை,சந்தேகத்தை தீர்க்கவேண்டும்  என்றும் அவர் கோரியுள்ளார்.           

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--