2020 ஒக்டோபர் 29, வியாழக்கிழமை

கச்சதீவை மீட்ககோருவோம்: பாலு

Kanagaraj   / 2013 ஓகஸ்ட் 03 , பி.ப. 08:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

கச்சதீவை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் குரல் எழுப்புவோம் என்று தி.மு.க. மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு தெரிவித்துள்ளார்.

புதுடில்லியில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரை சுமூகமாக நடத்துவது தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை சபாநாயகர் மீராகுமார் நேற்று ஏற்பாடு செய்திருந்தார்.

இந்த கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, கச்சதீவை மீட்பது தொடர்பாக நாடாளுமன்றத்தில் வலியுறுத்துவோம்.

அதுபோல இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங் பங்கேற்க கூடாது என்பதனை வலியுறுத்தி நாடாளுமன்றதில் எதிர்ப்பு தெரிவிப்போம் என்றார்.

இதேபோல் தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திர எம்.பிக்களும் தனி மாநிலம் கோரி பிற மாநில எம்.பிக்களும் குரல் கொடுக்கக் கூடும் என்பதால் மழைக்கால கூட்டத் தொடரும் கூட சுமூகமாக நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது என்றும் இந்தியச்செய்திகள் தெரிவிக்கின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--