2020 ஒக்டோபர் 29, வியாழக்கிழமை

கண்காணிப்பாளர்களை நியமிப்பது குறித்து பொதுநலவாய அதிகாரிகள் ஆராய்வு

Kanagaraj   / 2013 ஓகஸ்ட் 05 , பி.ப. 08:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கெலும் பண்டார

நடைபெறவிருக்கும் மாகாண சபை தேர்தல்களின் போது தமது கண்காணிப்பாளர்களை நியமிப்பது குறித்தும் கள நிலவரங்கள் தொடர்பிலும் பொதுநலவாய அமைப்பின் அதிகாரிகள் ஆராய்ந்துள்ளனர்.

கொழும்புக்கு வருகைதந்துள்ள அதிகாரிகள் இருவரே இவ்வாறு ஆராய்ந்துள்ளதாக அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.
பொதுநலவாயத்தின் அரசியல் அலுவல்கள் அதிகாரி அம்னா ஜடோய் மற்றும் ஜனநாயக பிரிவு அரசியல் அலுவல்கள் நிலைய தலைவரான மார்டின் கெசிரி ஆகிய இருவருமே கொழும்புக்கு விஜயம் செய்துள்ளனர்.

இவர்கள், இருவரும் தேர்தல்கள் கண்காணிப்பு அமைப்பான பவ்ரல் அமைப்பின் நிர்வாக பணிப்பாளர் ரோகண ஹெட்டியாராச்சியை நேற்று சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இந்த சந்திப்பின்போது வடக்கு தேர்தல் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

நாங்கள் தேர்தல் தலைமை ஆணையாளரிடம், வெளிநாட்டு கண்காணிப்பாளர்களை கேட்டிருந்தோம். அதன் முக்கியத்துவத்தைப் பற்றி எங்கள் கருத்துகளை கேட்டறிந்தார்கள்.

சுயாதீன தேர்தல், பொலிஸ் மற்றும் பொதுசேவை ஆணைக்குழுக்கள் இல்லதாதது மிக கவலைக்குரியது. இவை சுதந்திரமான நேர்மையான தேர்தல்களை நடத்துவதற்கு முக்கியமானதாகும். 17 ஆம் திருத்தச்சட்டம் ஒழிக்கப்பட்டதன் பின்னர் இவைகள் அரசாங்க திணைக்களங்களாக மாறியிருக்கின்றன. அதை கொண்டு அரசாங்கம் எதுவும் செய்யமுடியும் என்று தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுக்களின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

  Comments - 0

  • Kannan Tuesday, 06 August 2013 07:18 AM

    கட்டாயம் பொதுநலவாயத்தின் கண்காணிப்பாளர்கள் தேவை இல்லா விட்டால் கள்ள வோட் போட்டு வந்திடுவாங்கள்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .