2020 செப்டெம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை

கடன் எல்லையை கூட்டி வங்குரோத்து நிலையை தவிர்த்தது அமெரிக்கா

Kanagaraj   / 2013 ஒக்டோபர் 17 , மு.ப. 07:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்க அரசாங்கத்தின் கடன் எல்லையை அமெரிக்க காங்கிரஸ் அதிகரித்ததன் மூலம் அமெரிக்கா தனது கடனை திருப்ப செலுத்த முடியாத வங்குரோத்து நிலைக்கு தள்ளப்படுவதை தவிர்த்து கொண்டுள்ளது.

ஜனநாயக கட்சியினரும் குடியரசுக்கட்சியினரும் செனட்டில் செய்துகொண்ட விட்டுக்கொடுப்பு மூலம் இது சாத்தியமாகியது.
இந்த கடன் எல்லை அதிகரிப்பை பிரதிநிதிகள் சபை 285-144 வாக்குகளால் பின்னர் அங்கீகரித்தது.

இதன் மூலம் காலக்கெடுவுக்கு சில மணித்தியாலங்களுக்கு முன்னர் அமெரிக்காவின் கடன் எல்லை 16.7 திருல்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரிக்கப்பட்டது.

இதனால் அமெரிக்க வரவுசெலவுத்திட்டம் செயற்பட முடியாது போகும் நிலையிலிருந்து காப்பாற்றப்பட்டது.

மூடப்பட்ட மத்திய அரசாங்க நிறுவனங்கள் மீள திறக்கப்படவும் வேலையிழந்த ஊழியர்கள் வேலைக்கு திரும்பவும் இது வழிஅமைத்துள்ளது என்று வெளிநாட்டு செய்திகள் தெரிவித்தன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--