2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

மோசமான காலநிலை சில நாட்களுக்கு நீடிக்கும்

Kanagaraj   / 2013 ஒக்டோபர் 18 , பி.ப. 12:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் தற்போது நிலவுகின்ற மோசமான காலநிலை இன்னும் சில நாட்களுக்கு நீடிக்கும் என்று வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

இந்த காலப்பகுதியில் இடி, மின்னல் தாக்கமும் அதிகரித்திருக்கும் என்றும் நாட்டின் சில பாகங்களில் 100 மில்லிமீற்றர் மழை பெய்யும் என்றும் அந்த நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

காற்றின் வேகம் மணித்தியாலயத்திற்கு 68 கிலோமீற்றர் இருக்கும் என்பதனால் கடலுக்கு செல்வோர் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு வானிலை அவதான நிலையம் எச்சரித்துள்ளது.    

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--