2020 செப்டெம்பர் 18, வெள்ளிக்கிழமை

புகலிடம் கோருவோரை திருப்பியனுப்பினால் ஆபத்து: ஆணைக்குழு

Kanagaraj   / 2013 ஒக்டோபர் 22 , மு.ப. 07:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை அரசாங்கம் விசாரணைகளை கடுமைப்படுத்தியுள்ள நிலையில் இலங்கையிலிருந்து வந்த புகலிடம் கோருவோரை திருப்பியனுப்பப்படுமிடத்து மிகுந்த ஆபத்தான நிலைமைக்கு முகங்கொடுக்க நேருமென அவுஸ்திரேலிய மனித உரிமைகள் ஆணைக்குழு கூறியுள்ளது.

இந்த நிலைமையில் மேன் முறையீட்டுக்கான வாய்ப்புகளை குறைக்கப்படவுள்ளமை இந்த ஆபத்தை மேலும் அதிகரித்துள்ளதென அது எச்சரிக்கின்றது.

புகலிடம் கோருபவர் எவ்வாறு அவுஸ்திரேலியாவுக்கு வந்தார் என்பதை கவனியாமல் சகல அகதிகளையும் புதிய அரசாங்கம் சமமாக நடத்த வேண்டுமென அவுஸ்திரேலிய மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவர் கிலியன் றிக்ஸ் கூறினார்.

புகலிடம் கோருவோர் விடயத்தில் சர்வதேச சட்டத்தின்கீழ் அவுஸ்திரேலியாவின் கடப்பாட்டுக்கும் அது அகதிகளை நடத்தும் முறைக்கும் இடையில் பெரும் இடைவெளி இருப்பதாக அவர் கூறினார்.

உலகில் மிகவும் கடுமையான குடிவரவு சட்டங்களை கொண்ட நாடுகளில் ஒன்றாக அவுஸ்திரேலியா உள்ளதென அவர் கூறினார்.

இலங்கையிலிருந்து கூடுதலான அகதிகள் வந்ததை தொடர்ந்து முன்னைய தொழில்கட்சி அரசாங்கம் விசாரணைகனை கடுமையாக்கியதால் ஆயிரத்துக்கு மேற்பட்ட இலங்கையர்கள் விரைவாக திருப்பி அனுப்பப்பட்டனர்.

புதிதாக பதவிக்கு வந்த கூட்டரசாங்கம் விசாரணையை மேலும் கடுமையாக்கப் போவதாக கூறியுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .