2020 செப்டெம்பர் 26, சனிக்கிழமை

மண்வாரியால் தாக்கியவருக்கு சிறை

Kanagaraj   / 2013 ஒக்டோபர் 23 , பி.ப. 08:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரி.பாருக் தாஜுதின்

தனது பிறந்த தினத்தில் கோவிலுக்கு சென்றுகொண்டிருந்த 74 வயது பெண் ஒருவரை மண்வாரியால் அடித்து கொல்ல முயன்றாரென குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருட சிறைத்தண்டனையை கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று புதன்கிழமை வழங்கியது.

களனி, வௌல்துவ தேசிய வீடமைப்பு திட்டத்தை சேர்ந்த ஜோர்ஜ் கெஹான் என்பவர் சோம சமரதுங்க என்ற வயோதிப பெண்ணை தலையில் தாக்கினார் என குற்றஞ்சாட்டப்பட்டிருந்தார்.

குற்றத்தை குற்றவாளி ஒப்புக்கொண்டதை தொடர்ந்து பாதிக்கப்பட்டவருக்கு 85,000 ரூபா நட்டஈடும், 25,000 ரூபா தண்டமும் செலுத்த வேண்டுமென நீதவான் பணித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--