2020 டிசெம்பர் 05, சனிக்கிழமை

இந்திய பிரதமரின் வருகையை இலங்கை மறுக்கிறது

Kanagaraj   / 2013 டிசெம்பர் 05 , மு.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய நிதியமைச்சர் பி.சிதம்பரம் கடந்த வாரம் அறிவித்ததுபோல இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் வடமாகாணத்துக்கு செல்லவுள்ளார் என்பதை இலங்கை மறுத்துள்ளது.

'இலங்கைத் தமிழர்களின் வாழ்வாதாரத்துக்கான உரிமையும் இந்தியாவின் நிலைப்பாடும்' எனும் கருப்பொருளில் நடைபெறவுள்ள மாநாட்டுக்கு சிங் வருவார் என கூறினாலும் அவர் வருகைக்கான தினம் பற்றி சிதம்பரம் எதையும் குறிப்பிடவில்லை.

கொழும்பில் நடந்த பொதுநலவாய தலைவர்கள் மாநாட்டுக்கு பிரதமர் செல்லக் கூடாதென நிதியமைச்சர் சிதம்பரம் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் எ.கே.அன்ரனி ஆகியோரே அழுத்தம் கொடுத்தவர்கள் எனற கருத்தை கொழும்பு கொண்டுள்ளதென தகவலறிந்த வட்டாரங்கள் கூறின.

பிரதமர் மன்மோகன் சிங் தனது யாழ்ப்பாண விஜயத்தின்போது வடமாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை சந்திப்பார் என சென்னை மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போது சிதம்பரம் கூறினார்.

இலங்கை மீதான இந்தியாவின் அழுத்த வலு குறைந்துவிட்டது என இலங்கை அதிகாரிகள் கூறினர். இப்போது இந்திய செல்வதை நாம் கேட்க வேண்டியதில்லைஇ உதாரணமாக காங்கிரஸ் தலைவர்கள் எமக்கு கூறியபடி நாம் வடமாகாண சபை தேர்தலை நடத்தினோம். இனிமேல் இந்த அரசாங்கத்திடம் நாம் பேசமாட்டோம்  என இலங்கை அதிகாரி ஒருவர் கூறினார். (டெலிகிறாபிஸ் இன்டியா)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .